பக்கம்:மறைமலையம் 31.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

227

பிறந்த தமிழ்ச் சொல்லாகுமேயன்றி, வடசொல்லாதல் செல்லாது. மேலுங், கரணம் என்னுஞ் சொல் திருமணச் சடங்கிற்குப் பெயராகப் பழைய இருக்குவேதம் முதலான நூல்களில் வழங்கப்படுதலையுங் கண்டிலம். அதுவேயுமன்றித், தமிழுக்கு இலக்கணங்கூறுந் தொல்காப்பியர் தமிழருடைய வழக்க வொழுக்கங்களைத் தமிழ்ச்சொற்களாற் கூறக் காண்டுமேயன்றி வடசொற்களாற் கூறுதலை அவரது நூலுள் யாண்டுங் கண்டிலேம்; அதனாலுங், அதனாலுங், கரணம் என்பது பழந்தமிழ்ச் சொல்லேயாதல் ஒருதலை; கரண்டி, கரம் முதலான சாற்களுங் கருவி எனப் பொருள்படுந் தமிழ்ச்சொற்களேயாதலாற் கரணம் என்பதுந் தமிழ்ச்

சொல்லே யாதல் தேற்றமாமென்க.

முன்னெல்லாம், ஒருவரையொருவர் எதிர்ப்பட்டுக் காதல்கொண்ட ஆடவரும் மகளிருந், தம்மவர் நடுநின்று கூட்டாமல், தாமே ஒன்றுசேர்ந்து இல்வாழ்க்கையை நடத்தி வந்தனர். அக்காலத்தில் ஒருவரையொருவர் வஞ்சித் தாழுகுதலும் பொய்யுந் தலைக்காட்டவில்லை. பின்னர் நாட் செல்லச் செல்லச் சொன்னசொற் பொய்த்தொழுகலுங் கரவொழுக்கமுங் காத லொழுக்கத்திடையே தோன்றி வாழ்க்கையைச் சீர்குலைக்கலாயின. அம் மாறுதலைக் கண்ட பிறகே பண்டைத் தமிழ்ச்சான்றோர், முதலிற் காதல் கொண்ட இருவரைப் பலர் அறியத் தமராற் கூட்டுவித்து இல்வாழ்க்கைப் படுப்பிக்குந் திருமணச்சடங்கை வகுக்கலா யினர். இஃது ஆசிரியர் தொல்காப்பியனாரே,

“பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப

எனக் கூறுதலாற் றெற்றென விளங்காநிற்கும். காத லொழுக்கத்திற் பிழைபாடும் பொய்யும் பின்னாளிற் றோன் றினமைக்குத், துடியந்தமன்னன் முதலிற் சகுந்தலையைக் காதலிற்கூடிப், பின்னரவளைத் தான் கூடியதில்லையெனப் பொய்புகன்றமையே சான்றாம். எனவே, காதற் களவொழுக்க மும், அதில் ஈடுபட்டாரை அவர்தம் பெற் றாரும் உற்றாரும் இடைநின்று புணர்த்தி இல்லறத்தின்பாற் படுப்பிக்குங் கற்பொழுக்கமும் பண்டைத்தமிழர்க்குள் நிகழ்ந்த முறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/252&oldid=1592986" இலிருந்து மீள்விக்கப்பட்டது