பக்கம்:மறைமலையம் 31.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மறைமலையம் - 31

வி

உரைகாரரெல்லாந், தொல் காப்பியருக்கு நாலாயிர ஆண்டு பிற்பட்டகாலத்தே யிருந்தவர்; அல்லாமலும், இவ்வுரைகாரர் காலத்தே பார்ப்பனர்தம் பொருந்தாக் கொள்கைகள் இத்தமிழ் நாட்டின்கட் பரவி விட்டமையால், அக்கொள்கைகளிற் சிக்குண்ட அவ்வுரை காரர் அக்கொள்கைகளுக்கு ஏற்பத் தொல்காப்பிய நூலுக்கு இடை டையிடையே பொருந்தாவுரை யுரைத்து, அதன் ஆசிரியர் கருத்தினைப் பெரிதும் பிறழ்த்திப் பிழைபட்டனர். மேலும், நச்சினார்க்கினியர், ஆசிரியர் தொல்காப்பியனாரை ஓர் ஆரிய முனிவராக்க விழைந்து அவர்

ஜமதக்நி

புதல்வ ரென்றும், அவரது இயற்பெயர் திரணதூமாக்நி' என்றும், அவர் அகத்திய முனிவர்க்கு மாணாக்கரென்றும் ஒருபெரும் பொய்க்கதை கட்டி அதனைத் தமது உரைமுகத்தில் விரித்து வைத்தார். இக்கதைக்குத் தினையளவு சான்றுதானும் பழைய செந்தமிழ் இலக்கியங்களிலாதல், தொல்காப்பிய நூற்பா விலாதல் காணப்படவில்லை. அகத்திய முனிவரைப்பற்றிய குறிப்பு இறையனாரகப்பொரு ளுரைப்பாயிரத்தில் முதன் முதல் நீலகண்டனாரென்பவரால் நுழைக்கப்பட்டது. இறையனாரகப் பொருளுரைக்கு முற்பட்ட எந்தப் பழந் தமிழ்நூலிலும் அகத்தியரைப்பற்றிய குறிப்புமில்லை; அவர்க்குத் தொல் மாணாக்கரெனவாதல், தொல்காப்பியரின் இயற்பெயர் திரணதூமாக்நி எனவாதல் அப் பழைய செந்தமிழ் நூல்களில் யாண்டும் நுவலப்படவு மில்லை. அதனால், இவை யெல்லாந் தமிழ்மொழியின் சிறப்பைக் குலைத்துத் தமிழாசிரியரின் தனிப்பெருமாட்சி யினைச் சிதைக்கப் பார்ப்பனப் புலவர் சூழ்ச்சிசெய்து கட்டிய முழுப்பொய்யும் புரட்டு மாதலை உண்மைத் தமிழராவார் அனைவருங் கருத்திற் பதிக்கற்பாலார்.

காப்பியர்

இனி, மிகப்பழைய காலத்தே குடும்பத் தலைவராலும் அவர்க்குதவியாயிருந்த தமிழாசிரியராலும் நடத்திவைக்கப் பட்ட திருமணச்சடங்கு இக்காலத்துந் தமிழ் வகுப்பினர் சிலர்பாற், பார்ப்பனர் உதவியின்றியே நடத்தப்பட்டு வருதலால், உண்மைத் தமிழர்மரபிற் றோன்றிய மற்றை வகுப்பாரும் அப்பழைய திருமணச்சடங்கின்படி, தங்குல முதல்வரைக் கொண்டாவது, தம்மிற் கற்று வல்லராய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/255&oldid=1592989" இலிருந்து மீள்விக்கப்பட்டது