பக்கம்:மறைமலையம் 31.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மறைமலையம் - 31

ஒன்றே நுதலியது; தீப்பிழம்பு வடிவாம் அஃது இறைவ னுருவாயே திகழ்வது, பார்ப்பனர் வேட்ட வேள்வியோ உயிர்க்கொலை கட் குடியொடு கூடியது; தீவடிவோ இறைவ னுருவாய்க் கருதப் படாமற், பார்ப்பனர் தாம் வணங்குஞ் சிறுதெய்வங்களாகிய இந்திரன் வருணன் மித்திரன் முதலியோர்க்குத் தாங் கொடுக்கும் பலியுணவை ஏற்றுக் கொடுக்கும் ஓர் ஏவலனது வடிவாக அவராற் கருதப்படுவது. இன்னும் இதன் விரிவெல்லாம் மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது பெருநூலிற் கண்டுகொள்க.

மேற்கூறியவாறு, தமிழ் அந்தணர் இறைவன் வழிபாடாக வேட்டுவந்த முத்தீ வேள்வியைத், தமிழ்நாட்டிற் குடிபுகுந்து வைகிய திராவிட ஆரியப்பார்ப்பனர் தமது சிறுதெய்வ வெறியாட்டுக்குப் பயன்படுத்திக் கொண்டது மல்லாமல், தமிழ்மக்களிற் செல்வரா யிருப்பார் செய்த திருமணச் சடங்கிலும் அதனை மெல்லமெல்ல நுழைத்து, அவ்வாற்றால் தாமே அத்திருமணச் சடங்கினைச் செய்து வைக்கும் ஆசிரியராகவும் அமர்ந்து, அவரது செல்வத்தைத் தோலிருக்கச் சுளைவிழுங்குதல்போல் நயமாகக் கவர்ந்து கொள்ளுதற்கும் வழி பிறப்பித்து விட்டனர். இஃது இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னமே நிகழத் தொடங்கி விட்டமை சிலப்பதிகாரம் என்னுஞ் செந்தமிழ்ப் பொருட் L டாடர் நிலைச் செய்யுளால் நன் கறியப்படுகின்றது. மாசாத்துவான் என்னுஞ் செல்வத்திற் சிறந்த வணிகரின் புதல்வனான கோவலனுக்கும், அங்ஙனமே செல்வவளம் மிக்க மாநாயகன் என்னும் வணிகரின் புதல்வி கண்ணகிக்கும் நடந்த திருமணத்தை ஒரு திராவிட ஆரியப் பார்ப்பனனே ஆ சிரியனாய் அமர்ந்து முத்தீ வேள்விவேட்டு நடத்தி வைத்தமை,

“நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்

வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்

6

சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்

தீவலஞ் செய்வது காண்பார்கள் நோன்பென்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/263&oldid=1592997" இலிருந்து மீள்விக்கப்பட்டது