பக்கம்:மறைமலையம் 31.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

மறைமலையம் - 31

தாழ்மையாக நடத்தலின் மேன்மையினை எங்கும் பரவச் செய்தல் வேண்டும். தமிழருந் தமக்குள் தாழ்ந்த வகுப்பினரா யிருப்பவரை இழித்துப் பேசுதலும் அழைத்தலும் ஒரு சிறிதுங் கூடா. எல்லாரிடத்தும் அன்பாயும் வணக்க ஒடுக்கத்துடனும் நடத்தலே சீருஞ் சிறப்புந் தரும்.

“ஒழுக்கம் உடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்”

(குறள் 139)

என்னுந் தெய்வத் திருவள்ளுவர் அறவுரையினை எல்லாரும் எப்போதும் நினைவிலிருத்தி யொழுகுதலே வாய்மையாகும்.

6

இன்னுந், தமிழரில் நூல் ஓதுவாரை ‘ஓதுவார்” எனவும், நூல் கற்பிப்பாரை ஆசிரியர்' எனவுந், துறவொழுக்கம் உடையாரை ‘அந்தணர்’ எனவும், அரசியல் நடத்துவாரை ‘மன்னர்’ எனவும், உழவுத்தொழில் செய்வார் செய்விப்பாரை 'வேளாளர்' எனவுந், கொண்டு விற்றல் செய்வாரை வணிகர் எனவும் தச்சு, கொல், முதலான பதினெண் டொழில் புரிவாரைத் தச்சர், கொல்லர் எனவும் இப்போது வழங்குமாப் போல் எப்போதும் வழங்கி வருதலே செயற்பாலது. இத்தமிழ் வகுப்பினரையெல்லாம், ஆரிய மிருதி நூல் வகுப்பான 'பிரம்ம க்ஷத்திரிய வைசிய சூத்திர’குலங்களிற் சேர்த்துக் கூறுதல் மானக்குறைச்சலும் ஏதமுமாம் என்க.

னி,

இவ்வாறு தொழில் வேற்றுமையால் உண்டான குல வேற்றுமையையே பெரிது பாராட்டித் தமிழ் மக்கள் தம்முள் உண்ணல் கலத்தல்களைச் செய்யாமல், தனித் தனி வெவ் வேறினங்களாய்ப் பிரிந்து வலிவிழந்து துன்ப வாழ்க்கையிற் கிடந்துழல்வது நிரம்ப வருந்தத் தக்கதா யிருக்கின்றது. அங்ஙனம் வெவ்வேறிராமல் எல்லாருந் தங்குதடையின்றித் தத்தமக்கியைந்த குணநலஞ் செயல்நலம் அறிவுநலங் கல்விநலம் அழகுநலம் வாய்ந்தாருடன் கலத்தலில் மனத்திட்பத்துடன் முன்நிற்றல் வேண்டும். ஆனால் ஊன் உண்ணாச் சைவ வொழுக்கம் உடையவர் அச் சைவவொழுக்கம் உடையாருடன் ஒன்று கலத்தலே வேண்டற்பாலது; ஒரோவொருகாற் பிறநலம் பற்றி அவர் ஊன் உண்பாருடன் கலக்கவேண்டிவரின், அவரைச் சைவவொழுக்க முடையராக்கிப் பின் அவருடன் கலக்க வேண்டும் யன்றி, ஊன் உண்ணாச் சைவவொழுக் கத்தினின்றுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/323&oldid=1593057" இலிருந்து மீள்விக்கப்பட்டது