பக்கம்:மறைமலையம் 31.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

301

இ. புதல்வர்க்கு ஆக்கம்

னித், தாம் பெற்ற புதல்வர்க்குக் கல்வியறிவு பகட்டி, அவர் அதுகொண்டு தமது வாழ்க்கைக்குவேண்டும் பொருள் தேடிக் கொள்ளுமாறு செய்து, பின் செய்து, பின் அவரை அவரை இல்லற வாழ்க்கையில் நிலைப்பிக்கும் அவ்வளவே பெற்றோர் மக்கட்குச் செய்யக் கடமைப்பட்டவராவர். அவர்க்குச் செல்வப் பொருளைத் தேடித் தொகுத்துவைக்கும் பெற்றோர் அவர்க்குத் தீமையே செய்பவராவர். தமது குடும்பச் செலவுக்கு மேற்பட்ட பொருளைத் தனித் தமிழ்க் கல்லூரி வைத்துத் தனித்தமிழும், பயன் மிகுதியும் உடைய ஆங்கிலமும் அதனை யொத்த சில மொழிகளுங் கற்பித்தற்குதவியாகக் கொடுத்தல் வேண்டும்.

இக்காலத்திற்கு வரைதுறையின்றி உணவளிக்கும் அறம் பயன் றராமையுடன் அறச்சோறு தின்பார் பல தீயசெயல்கள் புரியமாறும் அவரை ஏவுகின்றது. உறுப் பறைகட்கும், பிணிப்பட்ட ஏழைகட்குங், கல்விபயிலும் எளிய மாணவர்க்கும், நூல் ஓதுவிக்கும் வறிய ஆசிரியர்க்கும், புதியன பழையன ஆராய்ந்து பலதுறைகளிற் பயன்படும் நூல்கள் இயற்றும் நூலாசிரியர்கட்குஞ், சொற்பொழிவு நிகழ்த்தும் நாவலர்க்குந், தவவொழுக்கத்தில் நிற்குந் துறவிகட்கும் உணவும் பொருளும் வேண்டுமட்டும் உவந்து நல்குதலே உண்மையான அறமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/326&oldid=1593061" இலிருந்து மீள்விக்கப்பட்டது