பக்கம்:மறைமலையம் 31.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

-

  • மறைமலையம் - 31

பாது

ரென்றும், அங்ஙனம் ஏழைக் குருக்கள்மாரைத் துன்புறுத்தி யும், வருவாய் மிகுதியுமுள்ள கோயிற்குருக்கள்மாரை நெருக்கியுந் திரட்டும் பெருந்தொகைப் பொருளிலிருந்து அக்கழகத்தில் வேலைபார்க்குந் தலைவர்கள் ஐந்நூறு ஆயிரம் இரண்டாயிரம் ஆகத் தமக்குப் பெருஞ் சம்பளம் எடுத்துக் கொள்கின்றன ரென்றும் பலரும் பலகால் வந்து கூறக் கேட்கின்றேம். இங்ஙனம் ‘அறநிலைப் பாதுகாப்புக் கழகம்' என ஒன்றுவைத்து, அதன் வாயிலாகவும் மக்களின் அறப்பொருளைப் பாழ்படுத்துதல் பெரிதும் வருந்தற்பாலது. இத்தகைய கழகம் எற்றுக்கு? அரசியலாரே தமது வெள்ளக்கார இனத்தவரில் ஒருவரைத் தலைவராக வைத்துத் திருகோயில் திருமடங்களின் வருவாய்ப் பொருளைச் செவ்வனே பயன்படச் செய்வார் களானால், அது நன்கு பயன்படுமென்பதே யாம் நாற்பத்தைந் தாண்டுகளுக்கு மேலாகக் கண்டறிந்த உண்மையாகும். நம்மக்கள் பல்லாயிரஞ் சாதி வேறுபாடுகளாலும் பல்லாயிரஞ் சமய வேறு பாடுகளாலும் பல்லாயிரஞ்

சிறு

சிறு

வகுப்புகளாகப் பிரிந்து சிதறுண்டு, ஒவ்வொரு வகுப்பாருந் தம்மவரல்லாத பிறவகுப்பினரை வெறுத்தும் பகைத்தும் இழிவுபடுத்தியும் வருகையிற் பெரும்பாலுங் கல்வியறிவில்லா நம் இந்து மக்களிடையே நம் இந்து மக்களே அரசியலில் நடுநிலை பிறழாது நின்று எல்லார்க்கும் பொதுவாக முறை செய்ய மாட்டுவரா? ஒரு சிறிதும் மாட்டார். இதனை யாமே நெடுகக் கண்டு வந்திருக்கின்றேம். நம் இந்துமக்களிடையே நடுநின்று அரசியல் நடத்தத் தக்கவர்கள், கல்வியறிவும் ஆராய்ச்சியறிவும் மிக்குச், சாதிவேற்றுமை சமயவேற்றுமை பாரா ஆங்கில நன்மக்களேயாவர் என்பது எமது கருத்து. “நாட்டாண்மை”” என்றுங் ‘குடியரசு’2 என்றும் வைத்து நடத்த முயல்வது. இந்து மக்கள் மக்கள் மேன்மேற் சீர்குலைவதற்கே இடஞ்செய்யும். இரண்டரையாண்டுகளாகப் பார்ப்பனர் ஒருவரை அமைச்சராக அமைத்து அரசியல் நடாத்தியதில், இத் தென்னாட்டவர்க்கு விளைந்த தீமைகளும் பெருஞ் செலவுமே யாங்கூறுவதற்கு ஒரு பெருஞ்சான்றாம். ஆகவே, அரசியலின் எல்லாத் துறைகளிலும் வெள்ளைக்கார நன்மக்களே தலைவர்களாயும், அவர்களின் கீழே மேற் பார்ப்பவராயும் அமர்ந்து அரசியலை நடாத்து வார்களாயின், மிகுதியான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/337&oldid=1593072" இலிருந்து மீள்விக்கப்பட்டது