பக்கம்:மறைமலையம் 34.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

121

கலைமகள்

(வேறு)

மணக்கும் மெல்லிதழ் வெண்டா மரைமேல் மங்கள வீணைக் கையுடையாள் மலர்மே லுறைவோன் கொழுநன்' அதனால் மன்றென அன்னான் நாவமர்வாள்

கணக்கும் தண்டமிழ்ச் சொல்லும் கலையாய்க் கற்பவர் நெஞ்சில் உள்ளிருப்பாள் கருத்தா யறிவைத் துலக்கும் இறைவி கற்பனைச் செல்வி காத்திடுக.

குணக்குன் றென்றுயர் கொள்கைத் திறத்தார்’ கொண்டநல் லில்லற வாழ்வினிலே

குவலயந் தண்டமி ழினிமை மாந்திடக்3 கொம்பினிற் றேனாய் வந்தவனை

பிணக்குற் றயலவர் பேசிடும் மொழிகள் பின்னிய தீமை வலைநீக்கிப் பிறங்கிடு செந்தமிழ் தன்னைக் காத்திடும்

பெற்றிகொ ளன்புச் சேயினையே.

L

1. மலரில் றைவோனாகிய பிரமன் கலைமகள் கணவன் 2. அடிகளின் பெற்றோர்

3. பருகிட

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/146&oldid=1595035" இலிருந்து மீள்விக்கப்பட்டது