பக்கம்:மறைமலையம் 34.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மறைமலையம் -34 *

நாகைப் பதியில் முன்வாழ்ந்து

நல்லோர் புலவர் பேரறிஞர்

நாடும் புலமைத் தெளிவாலே

நாளும் புகழை வரவாக்கித்

தோகைத் துணைவி யறங்காக்கத்

துள்ளும் சிந்தா மணி'மகவைத்

துவக்கக் கனியாய்ப் பெற்றுவகை துளிக்கக் கண்டே யனந்தபுரம்?

வாகை சூடுந் தமிழரசாய்

வாய்க்கக் கொண்டே பேரறிவால் வடித்துக் கொடுக்குங் கட்டுரைகள்

வளரும் புகழை வழங்கிடவே

தோகை மயிலோன் தந்ததமிழ்

சொற்றவ தாலோ தாலேலோ

தூய்மைத் தமிழ்செய் மறைமலையாந்

துணைவா தாலோ தாலேலோ.

24

1. அடிகளின் முதல் பெண் மகவின் பெயர்.

2.மனோன்மணீயம் நாடகம் இயற்றிய பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களின் தொடர்பால் அடிகள் திருவனந்தபுரத்தில் ஓர் ஆங்கிலப்பள்ளியில் தமிழாசிரியராக வேலையிலமர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/165&oldid=1595054" இலிருந்து மீள்விக்கப்பட்டது