பக்கம்:மறைமலையம் 34.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மறைமலையம் -34 *

நதியே கதித்தசடை மதியே புனைந்திருக்க

நயந்தாடும் கூத்தனுடனே

நளிரே' நிறைந்ததமிழ் மலரே எனப்பிணைந்து நறவூறு மன்புமலரே

2

துதியே புரிந்துமனத் துணையே யெனப்புகழத் தொடர்பாகி மெய்பொழுதுமே

துறைசேர் தமிழ்மணமும் துணையா யருள்குமரன் சொரிந்தேற்ற தெள்ளமுதே

நிதியே தனித்தமிழின் நினைவே கணிப்பருளும் நிலையான பண்புருவமே

நெறியே புதுப்பொலிவின் நிகழ்வே யொளிச்சுடரின் நிறைவான யின்பவெழிலே

கதியே பழுத்தநறுங் கனியே யெனத்திகழுங்

கனிவாயின் முத்தமருளே

கதுப்பை யணைத்துனது களிப்பா லெனக்குனது

கனிவாயின் முத்தமருளே.

1. பெருமை.

2. தேன்

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/191&oldid=1595080" இலிருந்து மீள்விக்கப்பட்டது