பக்கம்:மறைமலையம் 34.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மறைமலையம் -34 *

கயல்விழி யொருமகள் காத்திடுந் தமிழினைக்

கலைச்சுவைத் தேனாக்கிக்

களிக்கம னோன்மணிக் கவின்நா டகஞ்செய் கவிசுந் தரம்பிள்ளை

முயல்பவர் தமக்கொரு முயற்சியினுருவென முழங்கிய வ.உ.சி.

முனிவினை யழியாப் பரிதிமாற் கலைஞர் முதுபுகழ் திரு.வி.க.

செயல்நல முறுரசி கமணிசி தம்பரர்

சீர்மிகு பாண்டித்துரை

சிறப்புறப் பணிபுரி நாவலர் மற்றும்

திருவரங் கம்பிள்ளை

வயல்நிறை பயிரென வயங்கொள நட்டனை

வருகவே நீவருகவே

வளர்தமிழ்ப் புவிக்கென வள்ளுவ ராண்டினை

வழங்கினை நீ வருகவே.

53

இப்பாட்டு அடிகளிடம்

நட்புக்கொண்டோரைக்

குறிப்பிடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/197&oldid=1595086" இலிருந்து மீள்விக்கப்பட்டது