பக்கம்:மறைமலையம் 34.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

179

(சந்த விருத்தம்)

அரவு மதியு மொளியும் புனலு முடைய எளிய சிவனையே

அறிவு முணர்வு மிணைந்த பொழுதி லகத்தி லொடுக்கி யிருத்தியே அவனி மகிழத் தமிழின் பெருமை யதனை மிகவு முணர்த்தியே அடைந்த புகழின் செறிவிற் பொலிவும் நெறியிலடக்க'முளவனே இரவு செழிக்க அமுத ஒளியை யுமிழு முழுமை நிலவென

இறைவன் வகுத்த இனிய வுலகில் தமிழு முயர்ந்து செழிக்கவே எளிமை மிகுந்த கருணை யுளமு மிசைந்த பெருமை யழகுமே இயங்கி மனிதத் திருவு ருவினி லெழுந்த புனித வமுதமே

விரவு மொழிக ளகல மருளி லிருந்து தமிழர் விழித்திட

விடிவுப் பொழுதி லெழும்பு பரிதி யெனவும் படர்ந்த கருணையே விளையுங் கழனி வழங்க முளைத்து விரைந்து முதிர்ந்த பயிரென விரும்பியபடி தமிழர் பெருமை விளங்க முகிழ்த்த பெரியனே

வரவு தருக இனிமை பெருக வளமும் நலமும் பொலியவே

வணங்கு முலகு களித்து மகிழ்ந்து தமிழின் சுவையை யுணரவே வயங்கு மொளியில் திகழும் வனப்பை யுடைய மதலை வருகவே

வளமை தழுவு மதுரைத் தமிழை யுணர்த்து மமுதன் வருகவே. 60

1. உள்ளவனே என்பது உளவனே என வந்தது.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/204&oldid=1595093" இலிருந்து மீள்விக்கப்பட்டது