பக்கம்:மறைமலையம் 34.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

7. அம்புலிப் பருவம்

சாமம்:- ஒத்த நிலை கூறியழைத்தல் (ஆசிரிய விருத்தம்)

நிறைகலை ஈரெட்டில் நீமுதிர, பதினாறில்

நிறைந்திவன் கலைமுதிர்வான்

நெடும்புவிக் கெனச்சொக்கர் தருமதியம் நீயிவன்

நெறிசொக்கர் நல்குமதியம்

நறைசெறி அல்லிநகை மலரவரு வாயிவன்

நலவல்லி மலரவருவான்

நதிசேருங் கடல்பொங்க வருவைநீ யிவன்தமிழ் நவில்கடல் பொங்கவருவான்

மறைமலை யார்தாங்க வருவைநீ இவன்பெயர் மறைமலை தாங்கிவருவான்

மதிசூடி யருள்மேவி வருவைநீ இவன்கலை மதிசூடி யருள்மேவுவாள்

அறைமொழி மேலொக்க இவனைநீ ஒத்தலால்

அம்புலீ ஆடவாவே

அறிவோங்கு மறைமலை யடிகளுளம் மகிழ்வுற அம்புலீ ஆடவாவே.

சந்திரன் மறைமலையடிகள்

181

61

16 கலைகளையுடையவன். சிவன் வாழ்வு தருகின்ற மதி அல்லிமலர் மலர வரும். கடல்பொங்க வரும். வேதாசலநாதர் முடிமீது தங்கவரும். சிவன் அருள் பெற்று வரும். மேற்கூறிய வண்ணம் சந்திரனுக்கும், அடிகட்கும் ஒப்புமை கூறப்பட்டது.

16 வயதில் கலை முழுதுங் கற்றவன். தந்தை சொக்கர் வாழ்வு தரவந்தவர் மனைவி சவுந்தரவல்லி மகிழ வருவார். தமிழ்க் கடல் பொங்க வருவார். மறைமலை என்னும் பெயர் பெற்றவர். கலை கற்ற அறிவு பெற்று அருள்வார். அடிகட்கும் ஒப்புமை கூறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/206&oldid=1595095" இலிருந்து மீள்விக்கப்பட்டது