பக்கம்:மறைமலையம் 34.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மறைமலையம் -34 *

18

நல்லார் பரவும் 1சிவனிய நெறியும்

நலமிகு செந்தமிழும்

நாளும் அயலவர் தலையெடுப் பதனால் நலிவுறு நிலைமையுணர்ந்(து) ஒல்லும் வகையான் உறுபணி செய்யும் உறுதியின் 2புகலியர்கோன்

உயர்பெயர் தாங்கிய 3தலைமகன் தரலும் உவகை யொடும்பெற்றுக்

4கல்லா டையைமேற் கொண்டு 5தமிழ்முறை காட்டிய மெய்த்துறவின்

கண்ணிய முயரத் திண்ணிய வண்ணங் கனிவொடு செய்பணியால்

அல்லல் அறுத்தெமை ஆண்டுகொள் பெரும ஆடுக செங்கீரை!

அம்பல வாணன் அடிமலர் பரவி ஆடுக செங்கீரை!

குறிப்புரை :

1. சிவனியம்

சிவநெறி (சைவமதம்).

2. புகலியர் கோன் - ஆளுடைப்பிள்ளையார் (ஞானசம்பந்தர்).

3. தலைமகன் – அடிகளாரின் மூத்த மகனார் திருஞானசம்பந்தம் என்னும் பெயரினர்; அவர் கையாற் றரப்பெற்றே துவராடை பூண்டு அடிகளார் துறவிக்கோலம் பூண்டார்.

4. கல்லாடை துவராடை (காவியாடை).

5. தமிழ்முறை - இயற்கைக்கு மாறான தனித்துறவு கொள்ளாமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/267&oldid=1595156" இலிருந்து மீள்விக்கப்பட்டது