பக்கம்:மறைமலையம் 34.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

மறைமலையம் -34 *

68

நீர்வளஞ் சான்றநற் றாமரைப் பொய்கையில் நெடியநாள் 'நுணல்வைகினும்

நிறைமணங் கமழ்தலுறு தாமரைத் தேன்சுவை நென் முனைத் துணைநுகருமோ

ஏர்நலஞ் சான்றநற் செஞ்சடை இருத்தலால் இறைவனின் நலமறிவையோ

எம்முடைய பெருமகன் 2மும்மையும் பேரவை எடுத்தபொற் பாதத்துள

சீர்மிகுங் கதிரவன் பெருவெயிலை எதிரொளி செயவருதல் ஒரு பெருமையோ

செம்மாந்த புலமைநலம் மிகவுடைய நம்பியவன் சீர்த்திநீ அறிவைநன்றே

ஆர்வமுற நின்றனைத் தன்பால் அழைத்தனன் அம்புலீ யாடவாவே!

அரியகற் றவர்கள்பயில் நாகை கிழானொடும் அம்புலீ யாடவாவே!

குறிப்புரை :

இப்பாடலும் பிரிப்பு (பேதம்) எனும் வாயின் முறை பற்றியது.

1. நுணல்

2. மும்மை

தவளை.

எண்ணம், சொல், செயல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/317&oldid=1595206" இலிருந்து மீள்விக்கப்பட்டது