பக்கம்:மறைமலையம் 4.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

  • மறைமலையம் – 4

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

இந்நூல் கட்டுரை வடிவில் 1910ஆம் ஆண்டு ஞானசாகரம் ஐந்தாம் பதுமத்தில் ஆறாவது இதழில் தாடங்கியதாகும். திருக்குறள், திருமந்திரம், சித்தர் நூல்களில் வந்துள்ள வசிய முறைகளை உணர்தலால் தமிழ் மக்களின் வறுமைகளையும் அறியாமை நிலைகளையும் போக்க முடியுமென்று கருதினார் அடிகளார்

வசியத்தின் உண்மைநிலை, நினைவை ஒருவழி நிறுத்தல், நினைவை ஒருவழி நிறுத்தும் வகை, கண், எண்ணம் எண்ணத்தை வலுப்படுத்துவன, மந்திர மொழி, வசியச் செயல்கள், சேர்க்கைப் பொருள் கவர்ச்சி, கவர்ச்சிக்கு ஏற்ற காலம்,நடு யாமத்துச் செய்யும் கவர்ச்சி முறைகள் ஆகிய உட்தலைப்பு களைக் கொண்டு இந்நூல் விளங்குகிறது.

மக்களின் உள்ளத்தைக் கவர்ந்து இழுக்கும் ஈர்க்கும் ஓர் ஆற்றலே மனித வசியம் எனக் கூறும் அடிகளார். உள்ளத்து நிலைகள் உணர்வு நிலைகள் மனித வசியத்தின் பயன் முறைமை ஆகிய பல செய்திகளையும் குறிப் பிட்டுள்ளார்.

நூல் : மறைமலை அடிகளாரின் இலக்கியப் படைப்புகள் - பக்கம் : 21

ஆசிரியர் : நா. செயப்பிரகாசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/35&oldid=1575987" இலிருந்து மீள்விக்கப்பட்டது