பக்கம்:மறைமலையம் 4.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

மறைமலையம் – 4

அவரைக் கருதிப் பார்க்கின்றனர். இதுபோலவே, மக்களில் ஒவ்வொருவருந் தம்மைப்போல் இருப்பவர்களை உன்னி யாமலும், நன்கு மதியாமலும் ஒழுகுவர். தம்மைப்போலன்றி அழகிய அறிவு செயல் விழைவுகள் உடையாரைக்காணும் வழி அவர்கள் தம்மினும் வேறான தன்மையுள்ளவராய் இருப்பது உணர்ந்து, அவர்களிடத்து அச்சமும் நன்கு மதிப்பும் உடையராய் மக்கள் எல்லாரும் அவர்களுக்கு அடங்கி ஒடுங்கி நடக்கின்றனர். அழகிய உள்ளம் உடையாரிடத்து மக்கள் அச்சமும் நன்கு மதிப்பும் மட்டும் வைத்து நடப்பார்களென்று நினைக்க வேண்டாம். அவர்களோடு பழகப்பழக அவர்களின் அருமைக் குணங்களை நன்குணர்ந்து அவர்களிடத்து நெகிழாத பேரன்பும் உடையவர்களாக நடப்பார்கள். ஆகவே பிறருள்ளத்தைக் கவர வேண்டுமென எண்ணுபவர்கள், பிறரைவிடத் தம்மிடத்து உயர்குணங்கள் சிறப்புற்று விளங்கும்படி செய்து கொள்வார் களானால், அதுகண்ட பிறர் அவரது அருமை யுணர்ந்து அவர்க்கு அடங்கியொடுங்கி நடப்பர். அப்படியானால், தம்மிடத்து உயர்குணங்களை விளக்குதல்தான் எவ்வாறு என்றாற் பிறரைப்போல் அறிவு விழைவு தொழில்களை அழகல்லா வழிகளில் நுழைய விடாது அழகுமிக்கவற்றில் மட்டுமே புகுத்தல் வேண்டும்.

வி

இனி, ஒன்றை அறியுமிடத்து மக்கள் அறிவு தீய வழியிலுஞ் செல்கின்றது, நல்வழியிலுஞ் செல்கின்றது. நல்ல நூல்கள் பல இருப்பவும் அவற்றைக்கல்லாமற், பொய் கொலை களவு காமங்கட்குடி முதலியவற்றை மிகுத்துப்பேசுந் தீய நூல்களைக் கற்பதிலேயே பலர்க்கும் அறிவு செல்கின்றது. பிறர்க்குத் தீங்கின்றிப் பொருள்தேடும் நல்ல வழிகள் பல ருப்பவும் அவற்றைவிடுத்து, எல்லார்க்குந் தீமையே தரும் பொல்லாத சூழ்ச்சிகளாற் பொருள் தொகுப்பதற்கே எத்தனை பேர் அறிவைச் செலுத்திப் பாடுபடுகின்றார்கள்! பொய்கள் பற்பல சொலியுங், கொலைகள் பல செய்துங், களவாடியும், பெண்களைக் கூட்டிவிட்டுங், கள்ளால் மயக்கம் ஏற்றியும் பிறர் பொருளைக் கவர்ந்துகொண்ட ஒருவர் எத்தனை நாள் அப் பொருளை வைத்துப் பயன் பெறுவர்? குற்றங்கள் பலவுஞ் செய் து பொருள் ஈட்டியவர் அப்பொருளைக் காணும் போதெல்லாந் தாஞ்செய்த குற்றங்களை நினைத்து வருந்துவ ரல்லரோ? அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/41&oldid=1575993" இலிருந்து மீள்விக்கப்பட்டது