பக்கம்:மறைமலையம் 4.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

11

திரட்டும் அழகல்லா வழியில் அறிவைப் போகவிடாமற், பேரின்பப் பொருள்தேடும் அழகிய நெறியின்கண் அதனைப் புகுவித்தலே மிகவும் வேண்டற் பாலதாம். நிலையில்லாத பொருள்களைப் பற்றி விரித்துக் கூறும் பொய்ந்நூல்களை அறிவதனால் அழகிய உள்ளமுடையவர்களுக்கும் அறிவு மலினம் அடையும் ஆதலால், நிலையான பேரின்பப் பொருளைச் சொல்லும் உண்மை நூல்களை இடைவிடாது கற்றுவருதலே அறிவு விளக்கம் அடைதற்கு எளிதான வழியாகுமென்க.

னி, ஒன்றை விரும்புமிடத்தும் மக்களது உணர்வு தீய வழியிலுஞ் செல்கின்றது, நல்ல வழியிலுஞ் செல்கின்றது. தீயவழியிற் செல்கின்ற ருப்பமானது பற்றுதலுடனே கூடி நிகழும், நல்ல வழியிற் செல்கின்ற விருப்பமோ பற்று தலின்றியே நிகழும் முழு நீலமணிகளுஞ் சிவப்பும் வைரமும் பதித்துச் செய்த அழகிய பொற்கிண்ணம் ஒன்றைச் செல்வன் ஒருவன் வைத்திருக்கக் கண்ட அவன் நேசன் அதன் அழகை மிகவும் பாராட்டி வியப்பதுடன் போகாமல், அதனைத் தான் கைப்பற்றிக் கொள்ள வேண்டுமென்று நினைத்தால், அப்படி அவன் நினைப்பது பற்றுதலுடன் கூடிய விருப்பமாகையால் அது தீய விருப்பமாய் முடியும். அழகிய அப்பொருளைக் கண்டு வியந்து பாராட்டுவது குற்றமன்று. அதனைத் தான் எப்படியாவது கைப்பற்றிக்கொள்ள வேண்டுமென்று எண்ணுவதுதான் குற்றமாகும். மற்றொரு நண்பன் அக் கிண்ணத்தைக் கண்டு மிகமகிழ்ந்து வியந்தானாயினும் அவன் அதன்மேற் சிறிதும் அவா வைத்திலன். ஆகவே, இவனது விருப்பஞ்சிறிதும் பற்றின்றி நிகழ்ந்தமையால் இது மிகவும் நல்லதென்று சொல்லப் படுவதாகும். இவ்வாறே உலகத்திலுள்ள அழகிய பொருள் எதனையுந் தான் கண்டு விரும்பி மகிழலாமே யல்லாது. அதன்மேற் பற்று வைத்து ஒழுகுதல் சிறிதும் நன்மை தராது. பொருள்கள் மேற் பற்று வைக்கக் கவலையும் மனத் துயரமும் வந்து வந்து வருத்தும். பொற் கிண்ணத்தின்மேல் பற்று வைத்தவ னுக்கு அஃது அவன் கைக்கு எட்டாமையால் அளவிறந்த துயரமும் மனக்கவைைலயும் தருகின்றன. அதன்மேற் பற்றுவையாதவனுக்கோ அது மகிழ்ச்சியைத் தருமேயல் லாமற் சிறிதுந் துயரத்தைத் தராது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/44&oldid=1575996" இலிருந்து மீள்விக்கப்பட்டது