பக்கம்:மறைமலையம் 4.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மறைமலையம் – 4

திருடி வாழ முயல்கின்றான். ஒருவன் கொலை புரிந்து காலங்கழிக்க விரும்புகின்றான். ஒருவன் பொய்ச் சொற்களே பேசி நாளைக் கடத்துகின்றான். ஒருவன் கல்வி கற்றும், அக் கல்வி யாலாய பெரும் பயனைப் பெறாமற் செல்வமுடையார்பாற் சென்று அவரிடத்து இல்லாத குணங்களை எடுத்துச் சொல்லிப் பாட்டுப் பாடி பொருள் பெற்று வயிறு கழுவுகின்றான்.ஒருவன் பொருளுடையார் நேசம் பெறுவதற்காக அவர் வீட்டுத் தலைக் கடை நாய்போல் அவரிடங் காத்திருந்து, அவர் விரும்பும் வண்ணம் இனிக்கப் பேசி வாணாளை வீணாளாக்குகின்றான். ஒருவன் நாடகசாலைக்குப் போய் மகிழ்ச்சியாய்ப் பொழுது கழித்தலையே செய்கின்றான். ஒருவன் பலரொடு பலவூர்க்குஞ் சென் று உண்டாட்டிற் காலங்கழிக்கின்றான். இன்னும் ஆடவன் தன் வாணாளிற் புரியுந் தீய செய்கைகளோ அளவிறந்தன.

தமது நெற்றித் தண்ணீர் நிலத்தில் விழ நல் வழியில் வருந்தித் தேடிய பொருளைப் பகுத்து இரப்போர்க்கு மனங் கசிந்து கொடுத்துத் தாமுந் துய்த்து வாழ்வோர் உலகில் மிகச் சிலரினுஞ் சிலரே. மேலும், இக்காலத்திற் புதிய நாகரிகத்தைப் பின்பற்றினவர்களிற் பெரும்பாலாரும், வேறு மொழியைப் பயின்றவர்களும் மன அடக்கஞ் சிறிதும் இன்றி அறிவையும் ஒழுக்கத்தையும் வளரச் செய்யாமலும், ஏழை எளியவர் களுக்குங் கூன், குருடு, நொண்டி, சப்பாணி முதலான செயலற்றவர்களுக்கும் எள்ளளவேனும் உதவி செய்யாமலும், நெஞ்சம் பாறைபட்டுச் செய்யும் பயனற்ற செயல்களும் ஆரவாரங்களுந் தீமைகளுஞ் சொல்லப் புகுந்தால் நம் சொல்லளவில் அடங்கா. ஆ! என்னைப்போலவே இங்கே பிறந்த இவன் கூனனாயிருக்கின்றான்; கண் குருடாயிருக்கின்றான். யானோ கண் முதலான கருவிகளெல்லாம் முற்றும் பொருந்தப் பெற்றிருக்கின்றேன். ஆகவே, கண்ணில்லாத இவனுக்கு கண்ணுடை யனாகிய யான் உதவி செய்யும் நிலையில் வைக்கப் பட்டிருத்தலால், இவனுக்குத் துன்பம் உண்டாகா வண்ணம் யான் இவனைப் பாதுகாத்தல் வேண்டும். இவனோ கைகால்கள் இல்லாத முடவனாயிருக்கின்றான்.யானோ கைகால்கள் முதலிய உறுப்புகள் முற்றும் உடையனாயிருக்கின்றேன். ஆகவே, யான் வருந்திப் பாடுபட்டு இவனைப் பாதுகாக்கக் கடவேன். இவனோ

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/47&oldid=1575999" இலிருந்து மீள்விக்கப்பட்டது