பக்கம்:மறைமலையம் 4.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

15

உடம்பில் வலியற்றவன், இவனோ தள்ளாத கிழவன், இவர்களோ தாய் தந்தையர் அற்ற ஏழைப் பிள்ளைகள், இவளோ கணவனை யிழந்த காரிகை; யானோ உடம்பில் வலிமையுடையேன், இளம் பருவத்தினன், உறவினர் துணையுடையேன்; ஆகவே, யான் வருந்தித் தேடிய பொருளால் இவர் தம்மை முதலில் ஊட்டிப் பிறகு யான் உண்ணக் கடவேன்.” என்று எண்ணி அதன்படியே செய்வார் நில உலகத்தில் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? எண்ணிக்கைக்கும் அகப்படாமற் பெருகியிருக்கின்ற மக்கட் பரப்பில் இத்தன்மையோர் சிலரேயாயினும் எண்ணிச் சொல்வதற்கு இடமில்லாமற் போகின்றதென்றால், மக்கள் வாழ்க்கை எவ்வளவு இழிந்த நிலைமையில் இருக்கின்ற தென்பதனை வேறு எடுத்துப் பேசுதலும் வேண்டுமோ? தம்மிடத்துள்ள வியக்கத்தக்க ஆற்றல்களையெல்லாம் மக்கள் ங்ஙனம் வீண் செலவு செய்துவிடுவாரானால் அவர் மனக்கவர்ச்சி கைவரப்பெறுதல் எங்ஙனங் கைகூடும்?

இக்காலத்தில் எங்கும் பரவிவருங் கல்வியும், அக் கல்வியினுதவியாற்பெறும் நிலைகளும், அந்நிலைகளால் உண்டாகுந் தலைமையும் மக்கட் பிறப்பின் நோக்கத்தை மறக்கச் செய்து, பேர் அவாவிலுஞ் செருக்கிலுந் தம்மையுடையாரைக் கொண்டு போய் அழுத்தித் தீயவொழுக்கங்களான புதைசேற்றில் நுழைந்து உயிர்மாளச் செய்கின்றன. புதுக்கல்வி கற்றவர்கள் உலகமே பொருள் என்கிறார்கள். ஐம்பூதங்களைத் தவிர வேறு உயிரும் இல்லை, கடவுளும் இல்லை என்கின்றார்கள். ஆற்றைக் கடந்து வந்த அறிவில் குருவின் மாணவரைப்போல், தாம் எல்லாங் கற்றும் அங்ஙனங் கற்றவருந் தம்மையே இல்லாத வறும் பாழ் என்கின்றார்கள். நின் தாய் தந்தையார் யார் என்றால் அவரை யான் அறியேன் என்று சொல்லும் அகதிப் பிள்ளையைப் போல், இக்காலத்துப் புதுக்கலை ஞானிகளுந் தம்மையும் உலகத்தையும் ஈன்ற கடவுளான அம்மையப்பரையும் இல்லையென்று சொல்லி வழக்கிடுகின்றார்கள். தம்மையும் இழந்து, தாமிருக்கும் உடலையும் உலகையும் ஒவ்வோர் இமைப்பொழுதும் போற்றிவரும் அம்மையப்பரையும் இழந்து 'மண்ணேதாம்' என்று சொல்லி வெறும் மண்ணாய்ப் போகும் புதுக்கலை ஞானிகளின் கல்வி ஆ! எவ்வளவு அழகிது! தாம் அலவலுந் தலைமையும் பெற்றது தம்மோடொத்த மாந்தர்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/48&oldid=1576000" இலிருந்து மீள்விக்கப்பட்டது