பக்கம்:மறைமலையம் 4.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

மறைமலையம் – 4

உதவி செய்தற்பொருட்டே என்று உணராமல், அவ்வலுவலையுந் தலைமையையுமே துணையாகக் கொண்டு மன்னுயிர்க்கெல்லாம் இன்னல் இழைத்து அறக்கொடியராய் வாழ்வதிலுந் தம் உயிரை

டு நல்லரெனப்போதல் நன்றன்றோ? தனது தலைமையைச் செலுத்தி ஏழை எளியவர்களை வருத்தி அவர் பொருளைப் பறிக்கும் ஓ கொடிய மகனே! உன் அவா எஞ்ஞான்று தணியப் போகின்றது? நீ முற்பிறவியில் எத்தனை ஏழைக் குடும்பங்களைப் பாழாக்கி எவ்வளவு பொருளைக் குவித்து வைத்தனையோ, அப்பொருள் எல்லாம் இப்பிறவியில் வந்தனவா? இல்லையே, அங்ஙனம் வராதது தெரிந்தும் உன் அவாமட்டும் ஒழிந்திலதே! இப்பிறவியிலும் உன்னைப் போலவே பலரை வருத்திப் பொருள் பறித்தவர் அப்பொருளையும் இங்கே விட்டுத் தம்முடலையும் இங்கே விட்டுச் செத்துச் சாம்பராகக் கண்டும், நீ மட்டும் என்றும் நிலையா யிருப்பவன்போற் பின்னும் பொருள் தேடுதலிற் பேரவாக் கொண்டு உழல்கின்றனையே! நின்போற் றீது செய்யா எளிய விலங்குகள் நின்னினுஞ் சிறந்தனவல்லவோ! சிறிது நினைத்துப் பார். விலங்குகளினும் மேம்பட்ட பகுத்தறிவு நினக்கு வாய்த்தும் நீ அதனால் அடைந்த பயன் யாது? ‘மனிதவசியம்’ என்னும் இவ்வரிய நூலின் பெயரைக் கேட்டவுடனே ஓ! பொல்லாத மகனே, நீ மற்ற ஞானத் துறைகளில் எல்லாம் வெறுப் படைந்திருந்தும், இதனை மட்டும் ஏன் உடனே பயில விரும்பு கின்றாய்? ஏன் விரும்புகின்றாய்? இந்த நூலைப் படித்து எல்லாரையும் உன் வழிப் படுத்திக்கொண்டு, அவர்களுடைய பொருள்களையெல்லாம் பறித்துக்கொள்ளலாம் என்னும் அவா மிகுதியனாலன்றோ? “ஆசைக்கோர் அளவில்லை” என்னுந் தாயுமானச் செல்வரின் அறவுரையை எண்ணிப் பார்க்கையில் உனது பேரவாவுக்கு ஒரு வரம்பில்லையென்று தோன்று கின்றதே! ‘மனிதவசியம்' என்னும் இந்தப் புதிய நூலில் மக்கள் மனத்தைக் கவர்தற்கு எளியவான பல அருமையான முறைகளை எடுத்துச் சொல்லப்போகின்றோம். ஓ பொல்லா மகனே! உன் பொருட்டு இவற்றைச் சொல்லப்போகின்றோம் என்று நீ மனப்பால் குடித்து மகிழாதே. தீயனுங் கொடியனுமான நீ அந்த முறைகளைக் கையாண்டு மக்களை வசஞ்செய்து ஏமாற்ற மு முந்துவையானால் நீ உடனே அழிந்து போதல் திண்ணம். அம்முறைகள் உனக்குச் சிறிதும் பயன்படாமற் போகக்கடவன. மற்று நற்குண நற்செய்கை வாய்ந்த நல்லோர் அம் முறைகளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/49&oldid=1576001" இலிருந்து மீள்விக்கப்பட்டது