பக்கம்:மறைமலையம் 4.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

17

கையாண்டு உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் நன்மைகள் பலவுஞ் செய்வராதலால், அவர்களுக்குப் பயன்படுமென்று கருதியே அவற்றை இனிது விளக்கப் புகுகின்றோம் என்று அறிந்துகொள்க. நற்குண நற்செய்கை வாய்ந்தோர் தாமாகவே உலகை வசஞ் செய்ய வல்லவராவர். ஆகையால் அவர்கட்கு வசியமுறைகளை எடுத்துக் காட்டல் பயன் இல்லையே யென்றாலும், அப்படியன்று நாற்பக்கங்களும் மலையாற் சூழப்பட்ட காட்டின் நடுவிலே உள்ள ஒரு பெரிய ஏரியின்கண் அமிழ்தம் போன்ற தண்ணீர் நிரம்பியிருந்தாலும், அது நாட்டிலுள்ளார்க்குச் சிறிதும் பயன்படமாட்டாது. அவ் வேரியினின்றும் பல வாய்க்கால்கள் வெட்டுவித்து அதன் தண்ணீரை அவற்றின் வழியே கொண்டுபோய் நாட்டிலுள் ளார்க்குச் சேர்ப்பித்தால்தான் அவர்கள் அதனால் அளவிறந்த பயன்களைப் பெறுவார்கள். அதுபோல் ஒருவர் தாம் நற்குணநற் செய்கைகளால் நிறைந்திருந்தாலும் அவை தம்மைப் பிறர்க்குப் பயன்படுத்தும் வகை தெரிவாரானால் அவரால் உலகத்தார் சொல்லற்கரிய நன்மைகள் எல்லாம் பெற்று இன்புறுவார்கள். ஆகையால், மனிதவசிய முறைகளை வரிசையாக எடுத்துச் சொல்லுதல் அவர்கட்கு மிகவும் பயன் படற்பாலதேயாம் என்று தெளிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/50&oldid=1576002" இலிருந்து மீள்விக்கப்பட்டது