பக்கம்:மறைமலையம் 4.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

2. நினைவை ஒருவழி நிறுத்தல்

உலகத்திலே எந்தச் செயலையும் மக்கள் முடிக்க வேண்டியக் கால், அதனிடத்தே அவர் தமது கருத்தை நன்றாய்ப் பதியவைத்துத்தான் அதனை முடிக்கின்றனர். ஒருவர் மற்றொரு வரிடத்தில் ஒரு செய்தி கொண்டுவந்து சொல்லுகையிற், செல்பவருங் கேட்பவரும் அதனிடத்தே தமது கருத்தை ஊன்ற வைத்தே சொல்வதுங் கேட்பதுஞ் செய்கின்றார். அவ்வாறு அதில் மனத்தை ஊன்றாமல் வேறொன்றிலே அதனைச் செலுத்தி யிருந்தாற், சொல்பவர்க்குத் தாம் இன்னது சொல்வதென்பது தெரியாது கேட்பவர்க்குந் தாம் இன்னது கேட்பதென்பது புலப்படாது. ஒருவர் ஒரு பெரிய நகரத்திலே உள்ள தம் நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காகப் புகுந்து பல தெருக்களுங் கடந்து அவரிருக்குந் தெருவிற் போய் அங்குள்ள பல வீடுகளையும் விட்டு அவரிருக்கும் வீட்டைத் தெரிந்து அவரைக் கண்டுபேசித் திரும்பித் தம்மமூர்க்குப் போயினார். அவ்வாறு போனவர் தாம் போகும்போது தம் நண்பரது வீட்டை நன்றாக உன்னித்துப் பாராமற் போய்விட்டார். பின்னர் ஒருகால் மறுபடியுந் தம் நண்பரைக் காண்பதற்காக அப் பெரிய நகரத்திற் புகுந்து மிக அலைந்து திரிந்து திரும்பவும் அவரது வீட்டைக் கண்டுபிடித்தார். நண்பரைக் கண்டு பேசி இரண்டாந்தரம் பிரியும்போது, வீடு அடையாளந் தெரிவதற்குத் தாம் பட்ட பாட்டை நினைத்து, அந் நண்பர் வீட்டின் அமைப்புகளையும் அத்தெருவில் அஃதிருக்கு மிடத்தையும், அத் தெருவைக் கடந்து எளிதாகப் போகும் வழிகளையுஞ் செவ்வையாகக் கருத்திற் பதியவைத்துப் போனார். பின்னரும் ஒருகால் மூன்றாவது முறை தம் நண்பரைக் காண அந் நகரத்திற் புகுந்தபோது, சிறிதுங் கலக்கமின்றித் தெருக்களை எளிதிற் கடந்து வந்து அவ்வீட்டின் அடையாளமும் தெரிந்து உட்புகுந்தார். இந் நிகழ்ச்சியைக் கொண்டு, கருத்தை ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/51&oldid=1576003" இலிருந்து மீள்விக்கப்பட்டது