பக்கம்:மறைமலையம் 4.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மறைமலையம் – 4

களாகச் சிதறிப்போதல் போற், பலமுகமாய்ச் சிதறி உடைந்து போகின்றது. இத்தன்மையினரான மக்கள் சில நாழிகைப் பொழுதேனும் இனிமையான இசைப்பாட்டைக் கேட்பார்களானால் அவர்கள் மனம் ஒன்றுபட்டு நின்று அவர் கட்குப் பெருமகிழ்ச்சியினையும் உடல்நலத்தையுந் தரும் ஆகவே, தேன் பெருக்கெடுத்தாற் போல் நடைபெறும் இசைப்பாட்டுக்கும் மன ஒருமையே காரணம். பிறர் மனங்களை ஒன்று படுத்துவதற்கும் மன ஒருமையே காரணம்.

இனி, ஓவியம் வல்லான் காட்டும் ஓவியக்காட்சியும் இன்னிசை வல்லான் பாடி மகிழ்விக்கும் இசையின் மாட்சி யும், ஒருகால் ஓரிடத்தே ஒருங்கு பொருந்தித் தோன்றும் வண்ணம் ஆடியுங் பாடியுங் காட்டும் நாடகக்காரர் தமது மனவொருமை யாற்றம்மை காண்பார்க்கு விளைக்கும் இன்பத்தின் றன்மையை என்னென்று கூறுவேன்! ஓவியம் வல்லான் எழுதிக்காட்டும் ஓவியங்களிற் றோன்றும் உருவங்களும் பொருள்களும் உயிரில்லாத வெறும் போலிப் பொருள்கள். இசைவல்லான் பாடும் பாட்டுகளோ செவியுணர்வு ஒன்றுக்கு மட்டும் ஒருகால் இன்பந் தருவதல்லால், ஒரே காலத்தில் மற்றைப் பொறி யுணர்வுகளுக்கும் இன்பந்தர வல்லன அல்ல. ஆகையால், இவை யிரண்டுங் கண்செவி என்னும் பொறிகள் இரண்டிற்குந் தனித்தனியே சிறிது நேரம் மட்டுமே இன்பந்தந்து, பிறகு காண்பார்க்குங் கேட்பார்க்கும் அத்தனை மகிழ்ச்சி

யினைத் தராவாய் ஒழியும். மற்று, நாடகக்காரர் செய்யுந் திறங்களோ, ஒரே காலத்திற் கண்ணுக்கு இனிய காட்சி யினையுங் காதுக்கு இனிய இன்னிசையினையுந் தந்து காண்பார் மனத்தை ஒரு துறையில் நிற்கச் செய்து அவர்க்குப் பெருங் களிப்பினை விளைவிக்கின்றன. எல்லார் உள்ளத்தையும் உருக்கும் ஒரு செவ்விய கதையினைத் தழுவி நாடகம் நடத்தப்படும்போது, நாடக அரங்கிலே பெண் உரு ஆண் உருப்பூண்டு அழகின் மிக்க ஆடை அணிகலன்களைச் சிறக்க அணிந்து தாந்தாம் பூண்ட உருவிற்கு ஏற்பத் திறம்படப் பேசியும் உளம் நெகிழ்ந்துருகப் பாடியும் பலவகைக் குறிகள் காட்டி ஆடியும் உலகிற் பல திறப்பட்ட மக்களியற்கையை உள்ளவாறே தோன்றச்செய்யும் நாடக மாந்தர் தஞ் செய்கைகளைக் காணக்காணக் காணும் மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/55&oldid=1576007" இலிருந்து மீள்விக்கப்பட்டது