பக்கம்:மறைமலையம் 4.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மறைமலையம் – 4

ஓசையும் அன்றிப் பிரிதோர் ஓசையும் இன்றித் தனியே விளங்கும் ரு காட்டின் நடுவே சிறிது இடைவெளியா யிருக்கும் ஓர் இடத்தில் ஒரு புல்வேய்ந்த குடிசை கட்டி அதனுள் ஒரு வேட்டுவனும் ஒரு வேட்டுவிச்சியும் அவர் மக்களும் உவப்புடன் ஒருங்கிருந்து தேனுந்தினைமாவுங் கூட்டித் தேக்கிலையில் வைத்து உண்டுகொண்டிருக்கும் அருங்காட்சியினை அந்த நல்லிசைப் புலவன் தன் செய்யுட்களில் அமைத்துக் காட்டு மிடத்தும் அவையிற் சொல்லிக் காட்டுமிடத்தும் அதனைத் தமது அகக்கண் எதிரே கண்டு களியாதவர் யாரேனும் உளரோ? காதலிற் பிணைந்த ஒரு காதலனும் ஒரு காதலியுஞ் சுடுமணல் வெளியிற் றனியே நடந்துபோய் ஒரு ஊரில் ஓர் ஏழைக் குடிசையிலே இரவிற்றங்கி, மான்றோலிலே தாம் இனிது துயில்கொண்ட காட்சியினை மாணிக்கவாசகப் பெருமான் திருச்சிற்றம்பலக் கோவையாரில் அருளிச் செய்திருக்கும் அருமையினைத் தம்மகத்தே நினைந்து நினைந்து இன்பம் எய்தாதார் இந்நிலவுலகில் உளரோ? இங்ஙனம் உலக இயற்கைத் தோற்றங்களையும் மக்கள் செய்கைத் தோற்றங்களையுங், கற்போர் தமக்கு நேரே விளங்கக் காணுமாறு வெறுஞ் சொற்களினாலே திறம்பட அமைத்துக் காட்டும் நல்லிசைப் புலவனது திறமை அரிதரிது! வண்ணங்களாலுங் குறிகளாலுங் கோலங்களாலும் பொருள்களின் தோற்றங்களைக் காண்பார் கண்ணெதிரே காட்டும் ஓவியக்காரனது திறமையும் நாடகக்காரனது அருமையும் நல்லிசைப் புலவன் பெரும்புலமைத் திறத்திற்குமுன் எவ்வாறாம்? ஓவியக்காரன் எழுதிய ஓவியங்களைக் கண்டு மகிழ்ந்த மகிழ்ச்சியும் நாடகக்காரன் காட்டிய செய்கைத் திறங்களைக் கண்டு அடைந்த களிப்புஞ் சிறிதுநேரஞ் சென்றால் மறைந்துபோகும். நல்லிசைப் புலவன் புறக்கண்ணெதிரே யில்லாமல் அகக்கண்ணெதிரே காட்டு வியத்தகு தோற்றங்களோ, அவ்வறிவுக் கண் கொண்டு அவற்றைக் காணப்பெற்றார் அவற்றால் தாம் அடைந்த இன்பப் பெருக்கை என்றும் மறவாது, அதன் வயத்தராய் நின்று தூய்மை எய்தி இறைவனது திருவருள் இன்பத்திலே படிந்து விளங்குவர். செவிக்கு இன்பம் பயக்கும் இன்னிசைகளைப் பாடும் இசைப் புலவனுங்கூட நல்லிசைப் புலவனுக்குச் சிறிதும் ஒவ்வான் உடல் உருகத் தித்திக்கும் இசைப்புலவனது இசையுங் கண்களிக்கக் காட்டும் ஓவியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/59&oldid=1576011" இலிருந்து மீள்விக்கப்பட்டது