பக்கம்:மறைமலையம் 4.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மறைமலையம் -4

சிறிதும் வருத்தம் பயப்பன அல்ல. எளியரான மாந்தர் சென்றால் ஒரு நொடிப்பொழுதில் உயிர் துறப்பதற்குக் காரண மான இமய மலையிற் பனிப்பாறைகளின் மேல் இத்தகைய முனிவரர் சிறிதும் வருத்தமின்றித் தவம் இயற்றுதலை இன்றும் பார்க்கலாம். திருநாவுக்கரசு நாயனாரைச் சுண்ணாம்புக் காளவாயில் நுழைத்தவிடத்தும் அங்குள்ள கொடிய தீ அவரைச் சிறிதும் வருத்தியதில்லை. திருஞான சம்பந்தப் பெருமானைத் திருமடத்துடன் வைத்துச் சமணர் கொளுத்திவிட்ட பெருந்தீப் பிழம்பானது அவரைச் சிறிதும் வருத்தாமல், அவரது கட்டளையால் அம்மடத்தை விட்டகன்று பாண்டியனைப் பற்றியது. இவை தம்மை நுணுகி நோக்குங்கால், இறைவனருள் ஒளியிற் றோய்ந்து மெய்ந்நிலையிலிருந்த தாயுமான அடிகளை இராமநாதபுரத்திலெவனோ தீ வைத்துக் கொளுத்த அஃது அவரது உடம்பினைப் பழுது படுத்தினதென்று அறியார் சிலர் எழுதி வைத்த கதை வெறும் பொய்க் கதையேயாம் என்று அறிவான் மிக்கோர் இனிது உணர்ந்துகொள்வர். தாயுமான அடிகள் வரலாற்றினை மெய்ப்பட உணர்ந்த பெரியார் அது வெறும் பொய்க் கதையேயெனவும், நெருப்பால் அவர் அருமைத் திருவுருவஞ் சிறிதும் பழுதுபட்ட தில்லையெனவும் உரைப்பக்கேட்டேம்.

இனிப் பசியும் விடாயும் அருள் ஒளியிற் றோய்ந்த முனிவரைச் சிறிதும் வருத்துவதில்லை. இதற்குப் பெரிதும் வியக்கத்தக்க சான்றாக நாகப்பட்டினத்தில் விளங்குஞ் சில யோகியாரைக் கண்டு எல்லாரும் ஐயம் அகலப் பெறுவார்களாக. சென்ற ஒன்றரை ஆண்டுகளாகச்சோறு தண்ணீர் சிறிதும் இன்றித் தவநிலையில் இருக்கும் இப் பெரியாரின் அருமைத் திருவுடலஞ் சோறும் நீரும் இல்லாமைபற்றி ஒரு சிறிதாயினும் வருந்தாதாய் மாற்றற்ற பொன்வண்ணம் பெற்றுப் பொலிகின்றது. வரது முகமோ பொற்பாவையின் வடிவம்போல் திருத்தம் முதிர்ந்து பேரொளி வீசுகின்றது. தலையிலுள்ள குஞ்சியும் மோவாய் கன்னங்களில் வளர்ந்திருக்கும் மயிர்களுங் கன்னங்கறேல் என்று பளப்பளப்பாய் மிளிர்கின்றன. இவரது பொதுவான தோற்றமானது தெய்வ அழகு கனிந்த ஓர் இளைஞரின் வடிவாய்க் காணப்படுகின்றது. இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போற் சோறு தண்ணீரின்றிப் பட்டினி கிடக்கமுடியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/63&oldid=1576015" இலிருந்து மீள்விக்கப்பட்டது