பக்கம்:மறைமலையம் 4.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

நி

31

மக்கள் நிறைந்த இந் நிலவுலகில் இச் சிவயோகியார் சோறு தண்ணீர் சிறிதுமின்றித் தவநிலையிலிருக்கும் நிலை புதுமையினும் பெரும்புதுமையாய்த் திகழ்கின்ற தன்றோ? இதனால் இறைவன் அருள் ஒளியிற் றோய்ந்தவர்களுக்கு இவ்வுலகியற் பொருள்களின் உதவி சிறிதும் வேண்டப்படாது என்பதும், இவ்வுலகத்துப் பொருள்களாற் சிறிதுந் துன்பம் எய்தாது என்பதுந் தெள்ளிதின் விளங்கும் என்க.

அங்ஙனம் உலகத்துப் பொருள்களின் உதவியை அவர் வேண்டாதது என்னையெனின், உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களையும் எல்லா உயிர்களையும் வைத்துத் தாங்குவது இறைவன் திருவருளேயாகும். அத் திருவருளைக் காட்டினும் வலிமையில் மிக்கதும் நன்மையைத் தருவதுமான வேறு ஒரு பொருள் எங்குமே ல்லை. அத் தன்மைத்தாகிய திருவருளையே தமக்கு ஒப்பற்ற பெருந்துணையாகக் காண்டால் அதனால் அடையாத வலிமையும் நன்மையும் வேறுண்டோ? சொல்லுமின்! ஆகவே, இதன் உண்மையை இனிதுணர்ந்த பெரியோர் எந்நேரமும் இடைவிடாது தமதறிவை அத் திருவருளிலேயே நிலைபெற வைப்பர்; அவரது அறிவின் ஒருமைத் திறத்தை இவ்வளவென்று வரையறுத்துச் சொல்லல் எவர்க்கும் ஏலாததொன்றாம்.

இத்தனையுஞ் சொன்னமையால் நினைவை ஒருவழி நிறுத்தல், ஒவ்வொரு துறையிற் படிப்படியாய் முதிர்ந்து கடைசியாகத் திருவருள் வெளியிற் சென்று ஒன்றுபட்டு நிலைபெயராது என்றும் அதே வடிவாய் நிற்குந் தன்மை நன்கு விளங்காநிற்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/64&oldid=1576016" இலிருந்து மீள்விக்கப்பட்டது