பக்கம்:மறைமலையம் 4.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

3. நினைவை ஒருவழி நிறுத்தும் வகை

புறத்தே காணப்பட்டு இன்பந்தரும் ஓவியம், இசை, நாடகம் முதலிய துறைகளிலேயெல்லாம் மக்கள் நினைவு வருத்தம் இன்றி எளிதாகவே ஒன்றுபட்டு நின்றுவிடுகின்றது. இனி, அகத்தே வைத்து ஆராயப்படும் நல்லிசைப் புலவர் செய்யுட்களிலுந் திருவருள் ஒளியிலும் அந் நினைவு அங்ஙனம் ஒன்றுபட்டு நிற்றலோ மிகவும் வருத்தமாயிருக்கின்றது. ஐம்புல இன்பத்தில் மக்களுக்கு அவா மிகுதிப்படுதல்போல, அறிவியல் இன்பத்தில் அவா வரக் காண்கிலேம். இதற்குக் காரணம் யாது? என்று ஆராயுங்கால் மக்களுக்குள்ள அறியாமையே காரணமென்பது தெற்றெனப் புலப்படுகின்றது. நிலையாத நி பொருளை நிலையுள்ளதென்று நினைக்கின்றார்கள், நிலையுள்ள பொருளை ஓர் இமையளவேனும் நினைக்கின்றார்கள் இல்லை.“பொன்னை மாதரைப் பூமி” யைத் தமக்கு நிலையான துணையென மயங்குகிறார்கள்; மெய்யுணர்வை நல்லறிவைத் திருவருளைத் தமக்கு நிலையென நினைப்பதோ இல்லை. பொன்னும் மாதரும் நிலமுந் தமக்குத் துணையாய் நிலைப்பது எத்தனை நாள்? துணையாய்க் கூட வருவது எங்கே என்று தினையளவாயினும் நினைக்கலாகாதா? பொன்னும் மண்ணும் அறிவில்லாத பருப்பொருள்கள். அவற்றை மாந்தர் பயன் படுத்தினால் அல்லாமல் அவை தாமாகவே பயன்படுவன அல்ல. பொன் ஒருவர் கையினின்று ஒருவர் கைக்கு மாறும், நிலமும் இருந்தவிடத்தேயிருக்க அதனைப் பயன்படுத்துவோர் மாறிக்கொண்டே போவர். மாதரோ அறிவுடைய உயிர்களா யினும் அவர்களிற் பெரும்பாலார் பலதிறப்பட்ட எண்ண முடையராய் ஓர் உறுதியின்றி, ஒருகால் ஒருவனை விரும்பி மற்றொருகால் மற்றொருவனை விரும்பி ஒழுகும் இயல்புடையர் ஒருவனுடைய அருமை பெருமைகளை யுணர்ந்து அவனிடத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/65&oldid=1576017" இலிருந்து மீள்விக்கப்பட்டது