பக்கம்:மறைமலையம் 4.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

ரு

33

மட்டும் உறுதி வாய்ந்த மனமும் மெய்யன்பும் வைத்து ஒழுகுவோர் பெண்மக்களில் மிக அரியர். மேலும், அம்மாதரைத் தமக்குத் துணையென்று கொள்ளினும், அவர் தங் காதலருக்கு நேர்ந்த நோய் முதலிய துன்பங்களை நீக்கமாட்டுவாரா? காலன் வந்து உயிரைக் கொள்ளை கொள்ளும்போது சாவித்திரியைப் போல் அவனைத் தடுக்க வல்லராவரா? இல்லையே. இங்ஙன மிருக்க அம் மாதர்கள் துணையாவது எப்படி? மேலும், ஒரு பிறவியில் நாம் நமக்குத் துணையென எண்ணிய பொன்னும் மாதரும் மண்ணும் அப்பிறவி யொழியும்போது அவை தாமுங் கூடவே ஒழிந்து போக, மறுபடியும் எடுக்கும் மற்றொரு பிறவியில் வேறு பொன்னும் வேறு மண்ணும் வேறு மாதரும் வந்து சேர்கின்றமை வழக்கத்தில் நாடோறுங் காணப்படும் உண்மை யாதலை மாந்தர் சிறிதும் அறியாதது என்னோ! இங்ஙன மெல்லாம் நிலை யில்லாமல் மாறிக்கொண்டிருக்கும் இப் பொருள்களின் தன்மையைப் பகுத்தறிந்து, அவற்றிற் கருத்தை ஊன்றாமற் புளியம் பழமும் அதன் ஓடும்போல் எல்லா வற்றுடன் கூடியுங் கூடாத உள்ளங் கொண்டு, உள்ளொளியில் நாட்டம் வைத்தலே யாவருஞ் செயற்பால தாகிய கடமையாகும்.

இங்ஙனமன்றி வெளிப்பொருள்களிற் பற்று மிகுதியாய் வைத்து, அகத்தேயுந் தம் நினைவைத் திருப்பித் திருவருளிலே நிறுத்தலாமென்றால், அஃது எவர்க்குங் கைகூடாத செயலாகும். னனிற், புறப்பொருளிற் பற்று வைக்க வைக்க, அகத்தே திருப்பப்படும் நினைவு அப் புறப்பொருள் நினைவோடு உடன்கூடியே இயங்கும் அல்லாமல் அது திருவருள் ஒளியையே நாடி நிற்கமாட்டாதாகும். எதிலே ஒருவர் நினைவு ஊறியதோ அந்நினைவிலே அதன் சுவை ஏறிநிற்கும். "மாந்தர்க்கு 6 னத் தியல்பதாகும் அறிவு” என்ற திருவள்ளுவனார் திருமொழியின் உண்மையைச் சிறிதேனும் நினைந்து பாருங்கள்! பொன்னையே பொருளையே ஒருவன் நினைத்துக் கொண்டிருப்பானானால், அவன் நினைவு உள் முகமாய்த்திரும்பிய வழியும் அப்பொன்னையே பொருளையே நினைக்கும் அல்லாமல் உணர்வுக்கு உணர்வான அருளை நாடாது. ஏலேலசிங்கர் ாது. ஏலேலசிங்கர் உள்முகமாய்த் தமது நினைவைத் திருப்பி யிருக்கையில், அவரது நினைவு அவரது வாணிகக் கணக்கில் அழுந்தி அருளை நாடாது நிற்க, அங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/66&oldid=1576018" இலிருந்து மீள்விக்கப்பட்டது