பக்கம்:மறைமலையம் 4.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

  • மறைமலையம் - 4

கூடவில்லை. எல்லாவற்றையும் அடுத்தடுத்து மறந்து போகின்றார்கள். நாடோறும் பழகிக் கொண்டிருக்கும் பொருள்களையுங்கூட அவர்கள் உற்றுப் பார்த்து அறிவ தில்லாமையால் அவற்றையும் அவர்கள் மறந்து போகின் றார்கள். ஒருவன் தான் நாடோறும் பழகிவந்த தன் மனைவி மக்களின் உறுப்பு அடையாளங்களைச் செவ்வையாக நினைத்துப் பார்த்துச் சொல்லும்படி ஒருவர் கேட்டால், அப்போது அவன் அவற்றைச் சொல்லத் தெரியாமல் விழிக்கும் விழிப்பைத் தெரிந்துகொள்ளலாம். அவன் நாடோறும் பழகிவரினுந், தன் மனைவி மக்களின் உறுப்பு அடையாளங்களை அவன் பகுத்தறிந்து பாராமையால், அவர்கள் இல்லாத நேரத்தில் அவர்கள்

அடை

உன்

யாளங்களை நினைவுகூர்ந்து சொல்லும் நினைவின் ஆற்றல் ல்லாதவனாகின்றான். ஒரு மாணாக்கன் தன் புத்தகமொன்றை இழந்துவிட, அதனை எடுத்தவன் அவனைப் பார்த்து 'உன் புத்தகத்தின் அடையாளத்தைச் சொல்வா யானால் உனக்கு அதனைத் தருவேன்' என்று சொன்னான்; புத்தகத்திற்கு உரியவன் அதனைத் தான் நாடோறும் வைத்திருந்தும் அதன் அடையாளங்களை உற்றுப் பாராமையால் விழிப்பானாயினான்; எடுத்தவன் அவனை நோக்கி புத்தகத்தை நீ நின் கண் எதிரே விரித்துப் பார்ப்பதுபோல் மனத்திலே எண்ணிக்கொண்டு, இப்போது அதில் உள்ள ஏதேனும் ஓர் அடையாளத்தைக் குறிப்பிட்டுச் சொல்? என்று கேட்டான்; உடனே அவன் சிறிதுநேரம் பேசாதிருந்து ஆம், நூறு பக்கங்களுக்கு அப்பால் என் கைப் பெருவிரல் மையோடு அழுந்திய அடையாளம் இருக்கிறதா? பார்' என்றான்; அங்ஙனமே அவன் அதனைத் திருப்பிப் பார்க்க அவ்வடையாளம் இருக்கக் கண்டு,அதனை அவன் புத்தகமென்றே துணிந்துகொடுத்து விட்டான். இவ்வெடுத்துக் காட்டினாற், கட்பார்வை ஒரு பொருளில் அழுந்திச் செல்லாவிட்டால் அப்பொருள் நினைவுக்கு வாராதென்பதும், அதனை நினைவுக்குக் கொண்டுவர வேண்டுமானால் அதனைக் கண்ணெதிரே பார்ப்பதுபோல் மனத்தால் எண்ணிப் எண்ணிப் பழக வேண்டுமென்பதும் இனிது விளங்குகின்றன அல்லவோ? மனத்தாற் பார்த்துப் பழகிய விடத்துங் கட்பார்வையாற் சிறிதேனும் உற்றுப் பார்க்கப்படாத பொருள் நி நினைவுக்கு

வாராமல் மறைந்து போவதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/75&oldid=1576027" இலிருந்து மீள்விக்கப்பட்டது