பக்கம்:மறைமலையம் 4.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

45

புகுறி

என்பதை எத்தனைபேர் இன்னும் அறியாதவர்களாய் இருக்கின் றார்கள்! இன்னும் மரங்கள் மிக்க தோப்புகளிலும் நாட்டுப் புறங்களிலும் மலைகளிலுஞ் செல்ல நேர்ந்தால் அங்குள்ள பலவகை மரங்களின் அமைப்புகளையும் நுணுக்கமாய்த் தெரிந்து அம்மரங்களின் பெயர்களையுங் கேட்டறிதல் வேண்டும். அவ்விடங்களில் இயங்கும் பல்வகைப் பறவைகளின் பண்ட செயல்களையெல்லாம் இனிது நோக்கி நினைவிற் பதித்து மாறாப் பெருமகிழ்ச்சி அடைதல் வேண்டும். இக்காலத்துப் புலவர் களுக்கும் முற்காலத்துப் புலவர்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் பாருங்கள்! இக்காலத்துப் புலவர்கள், தாம் கண்ணாற் காணாத பொருள்களையும் பழம் புலவர்களின் பாட்டுகளிற் பார்த்துப் பாடுவார்களே அல்லாமல் தாமாகவே புதிதாகக் கண்டு பாடுந்திறம் ல்லாதவர்களாய் இருக்கின்றார்கள். ஒரு பெண்ணின் கண்ணைப் புனைந் துரைக்கப் புகுந்தால், கருவிளை கட ல்வேல் தாமரை மான் குவளை முதலிய ஒப்புமைப் பொருள்கள் எல்லாவற்றையும் ஒரு வரைதுறையின்றி ஒருங்கே எடுத்துக் கூறிவிடுவார்கள்.பழைய புலவரோ எந்தப் பெண்ணின் கண்ணுக்கு எந்தப் பொருள் பொருந்துமோ அதனை மட்டும் எடுத்துச்சொல்வார்கள். ஒரு பெண்ணின் கண் நீலநிறம் படர்ந்த வெண்மையொடு கூடி விளங்குமானால், அதற்குக் குவளை மலரின் இதழை மட்டும் ஒப்பாகக் கூறுதல் பொருந்துமேயன்றி அதற்குத் தாமரையிதழை ஒப்பாகக் கூறுதல் சிறிதும் பொருந்த மாட்டாது. எந்நேரமும் மருண்டு புரளும் ஒரு பெண்ணின் கண்ணுக்கு மானை ஒப்பாக எடுத்துச் சொல்லலாமேயன்றி அமைந்த நோக்கம் உடைய ஒரு மாதின் கண்ணுக்கு அதனை ஒப்பாகச் சொல்லுதல் குற்றமாகும். நெட்டிப்பூவைத் தாம் பாராதிருந்தும் இக்காலத்துப் புலவர் அதனை மாதரின் இதழுக்கு ஒப்பாக எடுத்துச் சொல்லி விடுகின்றனர்! 'நெல்லுக் காய்க்கும் மரம் இதுதானோ?' என்று கேட்கும் நகரத்துச் சிறார்க்கும் இக்காலத்துப் புலவர்க்கும் வேறுபாடு மிகுதியாய் இல்லை. பழைய புலவர் சொன்னதையே இவருஞ் சொல்வார்கள். உலகத்துப் பொருள்களை ஆராய்ந்து அறிந்து பழக்கம் ஏறாத இவர்கள் எதுகையும் மோனையுந் தம் கையில் அகப்பட்டு விட்டனவே என்று அகம்மகிழ்ந்து ஆயிரம் ஆயிரமாகப் பாட்டுகள் பாடிவிடுவது அறிவுடையோர் கண்டு நகுதற்கே

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/78&oldid=1576030" இலிருந்து மீள்விக்கப்பட்டது