பக்கம்:மறைமலையம் 4.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மறைமலையம் – 4

மருத்துவர் அவன் காலை அறுத்தெடுக்கப் புகுந்தார். புகுந்து அதனை அறுத்தெடுக்கும் முயற்சியில் அவர் கருத்தூன்றி யிருக்கையில், அக் கிழவனுக்கெதிரிலிருந்து அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவன் மனைவி கண்களில் நீர் வரிவரியாய் ஒழுகக் கூக்குரலிட்டுப் புலம்பி அழுவாளானாள். அக் கிழவனோ தன் கால் அறுப்புண்ணும் நோய் சிறிதும் உணராதவனாய், மிக்க அமைதியோடுந் தன் மனைவி அழுவதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான். இது செய்து முடிந்த பின், அறுத்தெடுத்தபோது அவன் நோய் சிறிதும் உணராமல் இருந்ததெப்படி என்று கேட்க, அவன்தான் அதனைச் சிறிதும் உணரவில்லை யென்றுந், தன் மனைவியே வெளிப்பார்வைக்கு அத்துன்பத்தை அடைந்தாள்போற் காட்டினள் என்றும் விடை பகர்ந்தான்.இதனால் அறியப்படுவது யாது? தீவுகளிலுங் காடுகளிலும், மலைகளிலும் உள்ள காட்டுமிறாண்டிகளுங்கூட உற்றுப் பார்க்கும் பழக்கத்தாற் பல நன்மைகள் அடையும் வழியை இயற்கையாகவே உணர்ந்திருக் கிறார்களென்பதேயாம். ஒருவர் கண்களோடு மற்றொருவர் கண்களுங் கலக்க, அவ்வழியே அவர்தம் மனங்களும் அவை வாயிலாக அவர்தம் உயிர்களுங் கலக்க, இங்ஙனம் நிகழும் உயிர்க்கூட்டுறவில் அவரது உயிர் உடம்பில் உறைத்து நில்லாமல் மேல்நிலையிலுள்ள அறிவுவெளி அல்லது அன்பு வெளியில் உருகி ஒன்றுபட்டு நிற்கின்றது. அங்ஙனம் நிற்கப்பெறும் அவர் அவ்வாறு தம் உடம்பின்கண் முனைப்பின்றி நிற்கும் நேரம் ரையில் தமதுடம்பில் நிகழும் நிகழ்ச்சிகளை ஒரு சிறிதும் உணர மாட்டார். இங்கே எடுத்துக்காட்டிய கிழவன் தன் மனைவி கண்களையும், அவன் மனைவி அவன்றன் கண்களையும் உற்று நோக்கி கொண்டிருந் தமையால் அவனது உயிர் அவனுடம்பிகண்முனைத்து நில்லா தாயிற்று; முனைத்து நில்லாதாகவே, புண் மருத்துவர் தன் காலை அறுத்தெடுக்கவும் அதனால் உண்டான நோயைச் சிறிதும் உணரானாய் அவன் அமைதியோடும் மகிழ்ந்திருந்தான்.

இவ் வ்வுண்மையை எமது அறிவு நிகழ்ச்சியால் ஆராய்ந்து பார்த்த உண்மைகளுஞ் சில உண்டு. அவற்றுள் ஒன்றை இங்கே எடுத்துக் கூறுகின்றோம்.ஏறக்குறையப் பதினாறு ஆண்டுள்ள எம் மாணவர் ஒருவரை ஒருகால் எமதில்லத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/83&oldid=1576035" இலிருந்து மீள்விக்கப்பட்டது