பக்கம்:மறைமலையம் 4.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

66

51

வருவித்து, எம் எதிரே நிறுத்திக்கொண்டு, எம்முடைய கண்களை உற்றுப் பார்க்கும்படி கற்பித்தேம். அவரும் அங்ஙனமே கண் இமையாமல் எங்கண்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். இவ்வாறு இரண்டொரு நிமிஷங்கள் இருந்த பிறகு அவரது வலக்கையைத் தூக்கிக் கவிழ்த்து இவ்விடத்தே ஒரு குண்டுசியை நுழைக்கப் போகின்றேன், அங்கே செந்நீர் வராது. அதனால் நீர் நோய்த் துன்பம் உணரவும் மாட்டீர்” என்று சொல்லிக் கொண்டே காண்டே ஒரு குண்டூசியை அவரது புறங்கையின் மேற்சதையிற் செருகி வைத்தேம். ஊசியைச் சதையில் நன்றாய் அழுந்தச் செருகியும் அங்கே சிறிதுங் குருதி வரவும் இல்லை. அவரதனால் துன்பம் எய்தவும் இல்லை. சிறிது நேரஞ் சென்ற பின் அவ்வூசியைப் பிடுங்கிவிட்டு, அவ்விடத்தை எமது விரலாற்றேய்த்துவிட்டேம். ஊசி குத்திய காயஞ் சிறிதேனும் அங்கே காணப்படவில்லை. இங்ஙனஞ் செய்து பார்த்த பிறகு, யாம் அம் மாணவரை நோக்கி, “யான் நுமது கையின் புறத்தில் ஊசி ஏற்றியபோது நீர் வருந்தாமல் இருந்ததெப்படி?” என்று வினவினேம். அதற்கவர், “நீங்கள் கற்பித்தபடி யான் உங்கள் கண்களையே நோக்கிக் கொண் டிருந்தேன். அதனால் ஊசி ஏற்றிய நோயை யான் உணர்ந்திலேன்” என்று விடை கூறினார். அவர் சொல்லிய மறுமொழி பொருத்த மாகவே இருந்தது.

இன்னும், ஆங்கில மொழியில் மிகவுங் கிளர்ச்சியொடு பேசுஞ் சொற்றிறம் வாய்ந்த கற்றார் ஒருவர் ஒருகால் ஒரு பேரவையிற் பேச நேர்ந்தபோது, தாம் அவைத்தலைவரை நோக்கிக், “குறிக்கப்பட்ட கால எல்லையைக் கடந்து யான் பேசிக்கொண்டு போவேனாயின், எனக்கு அதனைக் குறிப்பிடுங்கள்,” என்று சொல்லிவிட்டுத், தாம் பேச வேண்டிய பொருளை எடுத்து விரித்துப் பேசுவாரானார். விழித்தகண் விழித்தபடியே யிருக்க, அவர் மிகுந்த மனவெழுச்சியோடும் மாரிகாலத்து மழையே யென்னப் பேசிக்கொண்டு போவா ராயினர். இதற்குட் குறிக்கப்பட்ட கால வெல்லையும் கடந்து விட்டது. அவைத் தலைவரும் அதனை அவர்க்குக் குறிப்பிக்க வேண்டிப் பின்னே அவரது சட்டையைப் பிடித்து முதலில் இழுத்துப் பார்த்தார், அதனை அவர் உணரவில்லை. பிறகு அவரது கைவிரலைப் பிடித்து அழுத்தினார். அதனையும் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/84&oldid=1576036" இலிருந்து மீள்விக்கப்பட்டது