பக்கம்:மறைமலையம் 4.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

53

காணப்படுகின்றது. இதனைச்சில உண்மை நிகழ்ச்சிகளால் விளக்கிக் காட்டுவாம். ஒருகால் துரைமகனார் ஒருவர் தமது தோட்டத்தில் உலாவிக்கொண்டிருக்கையில், ஒரு புதர் மறைவிற் பாம்பு ஒன்றைச் சடுதியிற் பார்த்தார். அதன் கண்கள் ஒருவகையாய்ப் பளீரென்று மின்னவே அதனை உற்று நோக்கினார். சில நேரங்களுக்குப் பிறகு அவர் தம்முடைய கண்களை அதனைவிட்டு அப்புறந் திருப்ப முயன்றும் முடியாத வராயினர். அந்தப் பாம்பு விரைவிற் பேர் அளவினதாய்ப் பெருக்கவும், பளபளப்பான பல நிறங்களை அடுத்தடுத்துக் காட்டவுங் கண்டார். உடனே அவருக்கு ஒரு வகையான மயக்கம் உண்டாயிற்று. அந்தப் பாம்பு இருந்த முகமாய்க் கீழே அவர் விழுந்திருப்பர். அந் நேரத்தில் அவர்தம் மனைவியார் சடுதியில் அவர்கிட்ட வந்து, அவரது இடுப்பில் தமது கையைச் சுற்றி அவரை அப்பால் இழுத்து, அம் மயக்கத்தைத் தீர்த்துப் பாம்புக்கு இரையாகாமல் அவரைக் காப்பாற்றினார். இதனாற் பாம்புகள் சிலவற்றிற்கு மக்களையுந் தம்வசப்படுத்தக்கூடிய ஆற்றல் உண்டென்பது புலப்படுகின்றதன்றோ?

ரு

இன்னும், ஓர் ஊரில் ஒருகால் இருவர் சேர்ந்து ஒரு பாட்டையில் நடந்து சன்றனர். அவருள் ஒருவர் பாட்டையின் ஓரத்தில் ஏதோ ஒன்றனை நோக்குவதற்கு நின்றனர். சிறிது முன்னே சென்ற மற்றவர் தந் தோழர் பின்னே நின்றதைத் திரும்பிப் பார்த்தார். திரும்பிப் பார்த்ததுந் தம்மை அவர் கருதாமல் வேறெதனையோ பார்ப்பது கண்டு அவரை இழுத்துக் கொண்டுபோகக் கிட்டே வர, அவரோ ஒரு சாரைப்பாம்பின் மேல் தமது பார்வையைப் பதியவைத்து நிற்கவும், அப் பாம்பானது தனது தலையை உயர எடுத்து மினுமினுவென்று தன் கண்களால் அவரை ஊடுருவப் பார்த்துக் கொண்டிருக்கவுங் கண்டார். பாவம்! அந்த ஆளோ அப் பாம்பின் முகமாய்க் குனிந்து கொண்டு, “அஃதென்னைக் கடிக்கும்! அஃதென்னைக் கடிக்கும்!” என்று இரக்கப்படத்தக்க வகையாய் மெலிந்த குரவிற் கதறினார். அதற்கு அவர்தம் நண்பர், “ஆம், நீர் ஓடிப் போகாவிட்டால் அது கடிக்குந்தான்,” என்று சொல்லி, 'நல்லது, நீர் எதற்காக இங்கே நிற்கிறீர்?' என்று கேட்டார். அவர் ஒன்றுக்கும் மறுமொழி சொல்லாமல் ஊமைபோல் நிற்கக் கண்டு, மற்றவர் அங்குள்ள மரத்தின் கிளையொன்றை முறித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/86&oldid=1576038" இலிருந்து மீள்விக்கப்பட்டது