பக்கம்:மறைமலையம் 4.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

60

❖ - 4❖ மறைமலையம் – 4

தன்

முயற்சிகளையுஞ் செய்வார் போல் வெளிப் பார்வைக்குக் காணப்படினும், அவரது எண்ணமெல்லாம் தாம் முதன்மையாகக் கொண்ட ஒன்றிலேயே உறைத்து நிற்கும். நீர்க்குடத்தைத் தலைமேற் சுமந்து செல்லும் ஓர் ஏவற் பெண் ண் றொழிமாரோடு சிரித்து விளையாடிப் பேசிக்கொண்டு கைவீசிச் சன்றாலும் அவளது எண்ணமெல்லாந் தலைமேலுள்ள நீர்க்குடத்தின் மேல் நிலைபெற்று நிற்றலை அறிகின்றேம் அல்லமோ? இங்ஙனமே கருத்தை ஒருவழிப்படுத்தியிருக்கும் அறிவோர்கள், வேறு பல முயற்சிகளைச் செய்வார்போற் காணப்படினும், உண்மையில் அவர் தாங்கொண்ட ஒன்றிலேயே கடைப்பிடியாய் நிற்பரென்று உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

இவ்வாறு ஒரு காலத்து ஒரு முயற்சியை எடுத்தவர் அம்முயற்சியில் தமது கருத்தைப் பதியவைத்துப் பழகி வரவர, அவரது எண்ணமானது படிப்படியே வலிவெய்தி முதிர்ந்து அவர் எடுத்த அம்முயற்சியை நன்கு நிறைவேற்றி வைக்கும் எங்ஙனமெனிற், காட்டுவதும்: உலகத்தில் எங்கும் நிறைந்து அழியாத உண்மைப் பெரும் பொருளாயிருப்பன எண்ணங்களே யாகும். இவ்வெண்ணங்கள், தாம் வேறு உயிர்கள் வேறு என்று பகுத்தறிய வாராமல் அவ்வுயிர்களைப் பற்றிப் பிரிவறநிற்கும் பண்புகளேயாகையால், வை அவ்வுயிர்கடோறும் வெவ்வேறாய் அவ்வுயிர்களின் அறியாமை நீக்கத்திற்கு ஏற்பப் பெரியவுஞ் சிறியவுமாயிருக்கும். அறிவுடைய உயிர்ப்பொருள்கள் எல்லாவற்றினும் பெரிதாய் உள்ளது கடவுள் ஒன்றேயாம். கடவுளின் அறிவு எல்லையற்ற பெருமையுடையதாகலின், அவ்வறிவோடு ஒருமித்து நிகழும் அவரது எண்ணமும் வரம்பில்லாத பெருமையும் வலிமையும் உடை டையதாகும். அவ் வண்ணமானது, கடல் மணலை அளவிடினும் அளவிடப்படாத எண்ணிறந்த உலகங்களின் உள்ளும் புறம்புமெல்லாம் பிரிவின்றி நிறைந்து விளங்குகின்றது. அவ்வெண்ணத்தினால் உந்தப்பட்டே இவ்வுலகங்களெல்லாம் உருவுடன் தோன்றி ஓயாமல் இயங்குகின்றன. அவ்வெண்ணத் தினால் ஒருங்கு பொருத்தப்பட்டே எண்ணிறந்த உயிர் வகைகளெல்லாந் தத்தமக்குரிய உடம்புகளோடு பொருந்தி அறிவுகளும் எண்ணங்களும் உடையவாய்ப் போதருகின்றன. இத்துணைப் பெரிதாகிய இறைவனது எண்ணம் என்கின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/93&oldid=1576045" இலிருந்து மீள்விக்கப்பட்டது