பக்கம்:மறைமலையம் 5.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

1. தொலைவிலுணர்தற் பெயர்ப்புதுமை

இத் தலைப்பெயர் பலருக்குப் புதுமையாகக் காணப் லாம். அங்ஙனம் புதுமையாகத் தோன்றினாலும் இதனால் உணர்த்தப்படும் பொருளோ பெரும்பாலும் எல்லார்க்குந் தெரிந்ததொன்றேயாம். அன்பிற் சிறந்த மனைவி, நெடுநாளாக ஏதொரு செய்தியுந் தெரிவியாமல் தொலைவிலிருந்த தன் காதலனைப்பற்றி ஆழ நினைந்து கொண்டிருக்கையில் திடுமென அவனிடமிருந்து கடிதம்வரப் பார்த்து வியப்படை கின்றாளன்றோ? ஒவ்வொருகால் நாம் நமக்கு இனிய நண்பரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் திடீரென்று எதிரே வர உடனே நாம் வியப்படைந்து உங்களுக்கு ஆண்டு நூறு, இப்போது தான் உங்களைக் குறித்துப் பேசிகொண்டிருந்தோம்' என்று சொல்கின்றேம் அல்லமோ? இவ்வாறு தொலைவிலுள்ள வரை நினைப்பதும் நினைக்கப்பட்ட அவர் திடீரென வருதலும் அல்ல தவரிடமிருந்து செய்தி வருதலும் நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நிகழ்தல் வழக்கத்திற் கண்டு கொள்ளலாம். இங்ஙனம் நாங் காணவுங் கேட்கவும் ஏலாத தொலைதேயங்களில் நிகழும் நிகழ்ச்சிகளை நம் மனமானது எளிதில் உணர வல்லதாயிருக்கின்றது. தொலைநாட்டிலுள்ள ஒருவர் தம் நண்பரைப் பற்றி நினைந்த அப்பொழுதே வேற்றுநாட்டிலுள்ள அந் நண்பரும் அவரைப் பற்றி நினைந்ததைப் பின்னால் வந்த கடிதங்கள் செவ்வையாக விளக்கிக் காட்டியிருக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக எமதறி வெல்லையில் உண்மையாக நடந்த ஒரு ஒரு வரலாற்றினை இங்கெடுத்துக் காட்டுகின்றேம்.

6

உயிர்

எமக்குப் பதினைந்து பதினாறு ஆண்டிருக்கும். செந்தமிழ் இலக்கண இலக்கியங்களை மிக்க அருளோடும் எமக்கு எடுத்து அறிவுறுத்திய நல் ஆசிரியரான நாராயணசாமிப் பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/42&oldid=1576481" இலிருந்து மீள்விக்கப்பட்டது