பக்கம்:மறைமலையம் 5.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தொலைவிலுணர்தல்

11

கண்டதும் ஆகிய அடையாளங்களெல்லாம் நன்கு குறிப்பிக்கும் படிகட்டளையிட்டார்கள். அவ்வாறே அவ்வடையாளங்களைக் குறித்து அகவற் பாட்டில் ஒரு கடிதம் எழுதிச் சுந்தரம் பிள்ளையவர்கட்கு விடுத்தேம். அதற்கு மறுமொழிக் கடிதம் பத்துநாட் கழித்து வந்தது; அக் கடிதத்தொடுகூடவே தாம் யற்றிய மனோன்மணீயம் முழுப் புத்தகம் ஒன்றும் எம் ஆசிரியரவர்கட்குப் பிள்ளையவர்கள் தம் வணக்கவுரைகளுடன் விடுத்தார்கள். அவர் எழுதிய கடிதத்தைப் பிரித்துப் பார்க்கையில் அதிற் பின்வருமாறு எழுதப் பட்டிருந்தது.

.

66

‘அன்பார்ந்த ஐயா,

நாட்களுக்குமுன்

சுகத்திற்காகத்

ான

யான் ஐந்தாறு திருக்குற்றாலம் போயிருந்தேன். தங்களைப் பிரிந்து இருபது வருடங்களுக்குமேல் ஆனமையால், இதுகாறும் தங்களை நினையாமலிருந்த யான் திருக்குற்றாலத்தில் போயிருந்த போது, தங்களைப்பற்றி அடிக்கடி நினைக்கலானேன்; தங்கள் நினைவு எனக்கு மிகவும் பலமாகத் தோன்றியது.பிறகு நாலைந்து நாட்கள் கழிந்து திருவனந்தபுரம் திரும்பிவர, என் வீட்டில், தங்கள் மாணவர் வேதாசலம் பிள்ளையவர்கள் தங்களைப்பற்றி எழுதிய கடிதம் வந்திருந்தது. அதனைப் பார்த்ததும் எனக்குண் வியப்பு இவ்வளவென்று சொல்ல முடியாது-” என்று பின்னுஞ் சிலவற்றைச் சேர்த்து எழுதி யிருந்தார்; ஈண்டெழுதும் பொருளுக்கு அக் கடிதத்திலுள்ள இவ்வளவு மட்டுமே வேண்டுமாகையால், எஞ்சியவற்றை இங்கே பதிப்பியாது விடுகின்றேம். இக்கடிதத்தால் அறியற்பாலது யாது? எம் சிரியரும் யாமுஞ் சுந்தரம் பிள்ளை யவர்களைப்பற்றிக் கருத்தூன்றிப் பேசிக்கொண்டிருக்கையில், நாகப்பட்டினத்திற்கு நெடுந்தொலைவிலுள்ள திருக்குற்றாலத்தில் அப்போது தங்கியிருந்த சுந்தரம் பிள்ளை யவர்கட்கும் எம் ஆசிரியரைப் பற்றிய நினைவு சடுதியில் உண்ட ானதன்றோ? இருபது ஆண்டு காலமாக ஒருவரை யொருவர் நினைவு கூராமலிருந்த இவ்விருவரும் ஒரே காலத்தில் ஒருவரை ஒருவர் எமது முயற்சியால் நினைவு கூர்ந்தமை பெரிதும் உற்றுநோக்கற் பாலதாகும். எம் ஆசிரியர் பிள்ளையவர்களை மிகவும் ஆழ்ந்து நினைந்த நினைவானது அதே நேரத்தில் தொலைவிலிருந்த பிள்ளையவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/44&oldid=1576484" இலிருந்து மீள்விக்கப்பட்டது