பக்கம்:மறைமலையம் 5.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

மறைமலையம் – 5

பருவுடம்புகள் காற்றிலே இயங்குதல் என்னையென்றால், அவ்வுடம்புகள் எக்காலத்தும் இயல்பாகவே காற்றில் இயங்குவன அல்ல; இறக்கைகளின் உதவியாற் காற்றை அலைத்துச் செயற்கையாக அக் காற்றில் இயங்குகின்றன. ஆகையாற், பருப்பொருள்கள் பருப்பொருள்களிலேயே இயங்கும் என்னும் முறை பிறழமாட்டாதென்க. இனி, இந் நிலவுலகமானது உருண்டை வடிவினதாய் இடைவெளியிற் சுழல்கின்ற தென்னுங்கால், இ து கதிரவ னுலகத்தானும் அம்புலி யுலகத்தானும் முன்னும் பின்னும் இழுக்கப்பட்டு அங்ஙனஞ் சுழல்கின்றதே யன்றி அது தன்னியற்கை யாகவே அவ்வெளியிற் சுழல்கின்றதில்லையென்க.

L

இவ்வாறு கல் மண் முதலான பருப்பொருள்கள் நிலம் என்னும் பருப்பொருளிலும், நாற்றம் ஓசை ஒளிமுதலான நுண்பொருள்கள் காற்று வெளி முதலான நுண்பொருள்களிலும் இயங்குதல் போலவே, ஓசை ஒளியினும் மிக நுண்ணியவான நம்முடைய நினைவுகள் இயங்குதற்கு வான்வெளியினும் நுண்ணிதான ஒரு நினைவு வெளி இருக்க வேண்டுமென்பது நன்கு பெறப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/49&oldid=1576490" இலிருந்து மீள்விக்கப்பட்டது