பக்கம்:மறைமலையம் 5.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

4. மனவுணர்வை நுட்பமாக்கல்

நம்முடைய பொறி உணர்வுகளில் நமது உடம்பின் உணர்ச்சியே மிகவும் பரும்படியானது; வாயின் உணர்ச்சியோ உ ம்பி பினுஞ் சிறிது நுட்பமானது; மூக்கின் உணர்ச்சியோ வாயினும் நுட்பமானது; செவியின் உணர்ச்சியோ கண்ணினும் நுட்பமானது. ஆகையால், இவற்றைப் பழக்கத் துவங்கும்போது முதலில் உடம்பிலிருந்து தொடங்கல் வேண்டும். மண், நீர், நெருப்பு, காற்று என்னும் பொருள்கள் தன்மேற் படும்போது, உடம்பினிடத்தே உணர்வு காணப்படுகின்றது. இம் மண் முதலிய நான்கு பொருள்களிலும் மண் மிகவும் பரும்படியானது, நீர் அதனினுஞ் சிறிது நுண்ணியது, நெருப்பு அதனினும் நுண்ணியது, காற்று அதனினும் நுண்ணியது. இப்பொருள்கள் மேலே படும்போது உண்டாகும் உணர்வானது வெவ்வேறு உடம்புகளில் வெவ்வேறு வகையாய் ஏறியுங் குறைந்துந் தோன்றும். எருமை மாட்டின்மேல் ஒரு பெருந் தடிகொண்டு தாக்கினாலும் அஃது அதனை ஒருபொருட்டாய் எண்ணாது. ஆனால், அப்பெருந்தடி ஒரு மெல்லிய மானின் உடம்பின்மேல் பட்டால் அஃது அதனைத் தாங்கமாட்டாமல் இறந்துபோம். ஆகவே, எருமை உடம்பின் உணர்விலும் மானுடம்பின் உணர்வானது மிகவும் நுண்ணிதென்பது பெறப்படா நிற்கும். ா இங்ஙனமே மக்கள் உடம்புகளிலும் உணர்வு பல்வேறு தன்மைப்பட்டுத் தோன்றுகின்றது. மட்ட அறிவு உடையவன் உடம்பு மிகவும் முரடுபட்டுக் காணப்படுகின்றது; கூரிய அறிவுள்ளவன் உடம்போமுல்லைப்பூப்போல் மிகவும் மென்மை வாய்ந்து விளங்குகின்றது. முரண்ட உடம்புள்ள மட்டி பரற் கற்கள் மேல் நடந்தாலும் அவன் அடிகள் நோகா; அவன் உடம்பு குளிருக்கு நடுங்காது, வெயிலுக்குத் தளராது, அவன் கைகள் இரும்பே; மெல்லிய உடம்பு வாய்ந்த அறிஞனோ பூமேல் நடப்பினும் அவன் அடிகள் நோம். அவன் உடம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/56&oldid=1576525" இலிருந்து மீள்விக்கப்பட்டது