பக்கம்:மறைமலையம் 5.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தொலைவிலுணர்தல்

31

சுரக்குஞ் தெண்சுவைத் தண்ணீரைப்போல் நூற்பொருளை எடுத்து உரைக்குந்தோறும் விரிந்து விரிந்து புலப்படாநின்ற அறிவின் அருமை பெருமைகளைக் கண்டு வியந்து மகி.

ழாதாருண்டோ? எல்லா உயிர்களிடத்துங் கரைகடந்த இரக்கம் உடையோனாய் அவற்றின் துயர்கண்டு பொறாமல் தன்னை வருத்தியேனும் அப்பிறவுயிரின் துன்பந் துடைத்து, அருளொழுக்கமே தன் உயிரொழுக்கமாய் மேற்கொண்டு, இங்ஙனம் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் எழப் பெற்றமையானே இளகிய மென்னெஞ்சொடு எல்லாம்வல்ல இறைவனிடத்தே என்பெலாம் நெக்கு நெக்குருகி ஒன்று பட்டு நிற்கும் பெரியோன் அன்பிற்றிறத்தைக் கண்டு பிறிது பட்டு அன்புடையராகாரும் உண்டோ? சொல்லுமின்! எனவே அழகு, அறிவு, அன்பு என்னும் மூன்றினையும் பற்றி நினைக்குமிடத் தெல்லாம் மக்களெல்லார்க்கும் இயற்கையாகவே மகிழ்ச்சி எழ, அவர் உள்ளமும் எளிதிலே அந்நினைவின் வழிப்பட்டு நிற்றலால் இம்முறையால் உள்ளத்தைத் தெளிவுபெறச் செய்தலே எளிதான முறையாமென்பது இனிது பெறப்படும்.

6

பு

இனி, அழகு அறிவு அன்பு என்னும் மூன்றும் பண்ட களே யன்றிப் பண்புகளையுடைய பொருள்கள் அல்ல. பண்புகளை எவ்வளவுதான் நினைப்பினும் அவை மக்கள் உள்ளத்திற்குப் புலப்படமாட்டா. பண்புகளை நினைக்கப் புகுந்தால், அப் பண்புகள் தோன்றாமல் அப் பண்புகளையுடைய பொருளே நினைவில் வந்து தோன்றும். முல்லைப் பூவின் மணத்தை நினைக்கப்புகுந்தால் அந்த மணம் மட்டும் நினைவுக்கு வராமல் தன்னையுடைய பூவொடு கூடியே அது நினைவில் எழும். வாழைக்கனியின் சுவையை நினைக்கப்புகுந்தால் அச்சுவை மட்டுந் தனித்து நினைவில் எழாமல் அது தன்னையுடைய அக்கனியொடு கூடி யே நினைவிற்றோன்றாநிற்கும். மேலும், முல்லைப்பூவின் மணமும் வாழைக்கனியின் சுவையும் அப்பொருள்களைத் துய்த்துப் பார்ப்பவர்க்கே யல்லாமல் மற்றையர்க்குச் சிறிதும் விளங்க மாட்டா; ஏனென்றால் அந்த மணமும் அந்தச் சுவையும் முல்லை வாழை என்னும் அப்பொருள்களின் வழியாகவன்றி வேறு தனித்து நின்று துய்க்கப்படுதல் எங்கும் இல்லை. இதுபோலவே, அழகு என்னும் பண்பை நினைக்கப்புகுந்தால், அப் பண்பு தனித்து நில்லாத தொன்றாகையால் அதனையுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/64&oldid=1576592" இலிருந்து மீள்விக்கப்பட்டது