பக்கம்:மறைமலையம் 5.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தொலைவிலுணர்தல்

33

மெய்ப்பயன்களைத் தருவது போலப், பொய்ந் நினைவு மெய்ப் பயன்களைத் தராது பொய் படுமாகலின், கடவுளை வெறும் பண்பளவாகக் கொண்டு வழிபடுவே மென்பார்க்கு, அவரது வழிபாடு கடவுளியல்பொடு மாறுபட்ட பொய்வழிபாடாய்ப் போதலின், அவர் அப்பொய் வழிபாட்டால் இம்மை மறுமைப் பயன்களில் ஒரு தினைத்தனையும் பெறாரென்பதே முடிபு. ஆகவே, இவ்வியல்பினரான பொய்யறிவினர் இறுமாந்து உரைக்கும் பொய்யுரை ஈண்டுக் கருதற்பால தன்றென விடுக்க, எனவே, அழகு அறிவு அன்பு என்னும் பண்புகளை நினைக்கப் புகுந்தால் அப் பண்புகளையுடைய பொருள்கள் தாமே நினைவிற் றோன்றும் என்று உணர்க.

D

இனி, அழகு என்பது பெரும்பாலுங் கண்ணறிவைப் பற்றி நிற்கும் ஓர் இனிய தன்மையாகும்; இஃது ஏதேனும் ஒரு பொருளைப் பற்றி நிற்பதன்றித் தனித்து நில்லா தாகையால், தனை நினைவுக்குக் கொண்டுவருமிடத்தும் இது பற்றி நிற்கும் பாருள்களையே நினைத்துப் பார்க்கப் பழகிவரல் வேண்டும். வான் அளாவித்தோன்றும் மலைகளை யேனும், எல்லையின்றி விரிந்து கிடக்குங் கடலையேனும், மடமான் தொகுதிகள் அச்சமின்றி யுலவுங் காடுகளையேனும், இன்னும் வைபோன்ற நிலத் தோற்றங்களையேனும் நினைவிற் காண்டுவந்து பயிலல் வேண்டும். இங்ஙனஞ் சில நாட்கள் பழகிய பிறகு திருத்தமாகச் செய்யப்பட்ட கல்வடிவுகளையும், அருமையாக வரையப்பட்ட ஓவியங்களையும் அகக் கண் எதிரே கொண்டுவந்து நோக்குக. அதன் பின்னர் அழகின் மிக்க ஆடவர் மகளிர் என்னும் இருதிறத்தாரில் எவரையேனும் அடிக்கடி நினைவிற் கொண்டுவருக. உயிரில்லாத ஏனைத் தோற்றங்களை அகக்கண்ணிற் பார்க்கும் பழக்கத்தினும், உயிரொடு கூடிய உருவங்களை நினைக்கும் பழக்கமே சிறந்ததாகும்; இனிஉயிரொடு கூடிய உருவங்களுள்ளும், அறிவில் மிக்கவற்றின் உருவங்களை நினைத்தலே மிகச் சிறந்ததாகும்; இனி அறிவின் மிக்க உயிர் வடிவங்களினும் அவ்வறிவோடு அன்பும் மிக்க உயிர் வடிவங்களை நினைவிற்கொண்டு வருதலே அதனினும் மிகச் சிறந்த பழக்கமாகும். அழகு அறிவு அன்பு என்னும் மூன்றொடு தெய்வத் தன்மையும் வாய்ந்த உயிர் வடிவை உணர்ந்து ன்புறுவது அதனினும் மிகச் சிறந்த பழக்கமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/66&oldid=1576609" இலிருந்து மீள்விக்கப்பட்டது