பக்கம்:மறைமலையம் 5.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தொலைவிலுணர்தல்

39

நிறைக்கப்பட்டுப் பின்னும் பின்னும் நாம் வேண்டிய முயற்சிகளைச் செய்தற்கு நம்மை வலிவுடையவராக்கி வரும்.

அங்ஙனம் ளைப்பாறுதல் இன்றி ஓயாமல் முயல்வதிலேயே ஆவியைச் செலவழித்து வந்தால் முதுமைப் பொழுதாகிய வேனிற்காலம் வரும் முன்னமே ஆவிவலிமை முழுதும் வறண்டு உயிரை உடம்பினின்றும் அகலச் செய்யும். ஆனது பற்றியே, இரவில் இளைப்பாற்று தற்பொருட்டு உயிர் களுக்குத் தூக்கம் வருகின்றது. இனித், தூக்கமோ அறியாமையில் நடைபெறுகின்றதல்லாமல், அறிவொடு சிறிதும் நடைபெறக் காணோம். அங்ஙனமாயின், இளைப்பாறுதல் என்பது அறியாமை யிற்றான் நிகழவேண்டுவதுபோலும் எனின், அது பொருந்தாது. தொழில் செய்து அலுத்துப்போனவர்கள் அறிவோடிருந்து இளைப்பாறுதலையும் நாம் பார்த்திருக்கின்றோமே. இன்பமான கதையைப் பிறர் ஒருவர் எடுத்துச்சொல்ல அதனைக் கேட்டு மகிழ்ந்து கொண்டே, வேலை செய்ததனால் உண்டான இளைப்புத் தீர்ந்து தொழிலாளிகள் மனக்கிளர்ச்சியோடுஞ் செல்வதை நாம் எப்போதும் பார்க்கலாமே. இன்பத்திலே நம தறிவு உறைத்து நிற்கையில் நமக்கு எவ்வகையான அலுப்புந் தோன்றாமையை நாமும் நமது பழக்கத்திற் பலகாலுங் கண்டிருக்கலாம். மக்களின் அறிவு உடம்பிலுள்ள உறுப்புகளின் வழியாகப் பலதுறையில் மாறி மாறி ஓடுவதனாலேதான் அயர்ச்சியும் இளைப்பும் வந்து மூடுகின்றன. எந்நேரமும் ஓயாமற் கல்வி பயின்றுவருபவர்களுக்கு அயர்ந்த தூக்கம் வருவதில்லை, உடம்பின் உழைப்பு மிகுதியாயுள்ளவர்களுக்கே தம்மை மறந்த தூக்கம் வருகின்றது. ஆகையால், தம்மை மறந்து தூங்கும்படியான அவ்வளவுக்கு உடம்பை உழைப்பில் விடுவது அத்தன்மையாக விரும்பத் தக்கதன்று. தன்னை மறந்து தூங்குவதுதான் உடம்பின் நலத்தைப் பாதுகாப்பதற்கு வழியென்றும், ஆகவே அதனை வருவித்தற்குக் கடுமையான உழைப்புக் கட்டாயமாக வேண்டற்பாலதேயா மென்றும் பெரும்பாலார் பிழைபடக் கருதுகின்றனர். இந்த மக்கட்பிறவி எடுத்தது கடுமையாக உழைத்தற்கும் பின்னர் அதனால் அறிவின்றித் தூங்குதற்குந்தாமா? தூக்கம் மிகுதியாயில்லாதவர்களுக்கு உடம்பின் நலங் குறையும் என்றால், நன்றாய் உழைக்கும் மாடுகளுங் குதிரைகளுந் தம்மை மறந்து உறங்காமை என்னை? அங்ஙனம் உறங்காமலிருந்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/72&oldid=1576659" இலிருந்து மீள்விக்கப்பட்டது