பக்கம்:மறைமலையம் 5.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைபொருளியல் -3

vii

தனித்தமிழ் நடையின் தந்தை!

அடிகள் அவர்கள் ஏறத்தாழ ஐம்பதாண்டுகள் தமிழ் மொழியின் ஆக்கத்திற்காகவும், தமிழ் மக்களின் முன்னேற்றத்திற் காகவும் அரும்பெருந் தொண்டுகள் ஆற்றிய பெரியார்களுள் தலை சிறந்தவர்கள். தமிழ் தமிழ் மொழி தனித்தியங்கவல்லது என்பதைத் தங்கள் எழுத்தாலும் பேச்சாலும் உலகறியச் செய்த பெருமை அவர்களுக்கே உரியது.

து

நாட்டில் "மறைமலையடிகளார் நடை என ஒன்று உருவெடுத்துத் தோன்றிப் பரவியுள்ளது. எனவே, அவர்கள் “தனித்தமிழ் நடையின் தந்தை” எனற்பாலர்.

66

அடிகளார் தமிழ் மக்கள் அனைவரும் தம் பழம் பெருமையை உணர வேண்டும் வேண்டும் என்று விரும்பியவர்; இக்காலத் தாழ்ந்த நிலையையும் உணர வேண்டும் என்று விழைந்தவர்; அவை காரணமாக இனி வருங்காலத்தில் தம்மை உயர்த்தி நிறுத்த வேண்டித் தமிழர் பெருமுயற்சி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியவர். இந்தி பொது மொழியாகித் தமிழர்க்குக் கட்டாய மொழியாகும் பெற்றி உடையதன்று என்பதைத் தக்க காரணங்களோடு எடுத்துக் காட்டி வெளிப்படைக் கடிதம் எழுதியவர்.

டாக்டர். அ. சிதம்பரநாதச் செட்டியார், எம்.ஏ.

(பக். 37-38)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/8&oldid=1576437" இலிருந்து மீள்விக்கப்பட்டது