பக்கம்:மறைமலையம் 6.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

(திரைக்குப் பின்னே)

69

கௗதமீ! சார்ங்கரவன் முதலியோரைச் சகுந்தலையின் உடன்போகச் சொல்.

பிரியம்வதை : (உற்றுக்கேட்டு) அனசூயே! சுருக்குப் படுத்து, சுருக்குப்படுத்து அத்தினாபுரத்திற்குச் செல்ல வேண்டுந் துறவிகள் அதோ அழைக்கப்படுகின்றார்கள்.

(அனசூயை மங்களமான மணக்கூட்டை

க் கையி

லெடுத்துக்கொண்டு வருகின்றாள்.)

அனசூயை : தோழி! வா நாம் போவோம். (இருவருஞ் சுற்றிப் போகின்றார்கள்.)

பிரியம்வதை : (உற்றுப்பார்த்து) அதோ பார் சகுந்தலை விடியற்காலத்திலே தலைமுழுகி, முனிவரின் மனைவியர் கையில் காட்டுத்தானிய மஞ்சளரிசி யேந்தி வாழ்த்துரைப்ப அமர்ந்திருக்கின்றாள்! நாமும் அவளிடம் போவோம். (முன் போகின்றனர்.)

(மேற்சொல்லியபடி சகுந்தலை மணையிலிருந்த வண்ணமாய்த் தோன்றுகின்றாள்.)

முனிவர் மனைவியருள் ஒருவர் : (சகுந்தலையை நோக்கி) குழந்தாய்! நீ நின் கணவனால் நன்கு மதிக்கப்பட்டுப் ‘பட்டத்தரசி' என்னுஞ் சிறப்புப் பெறுவாயாக!

மற்றொருவர் : குழந்தாய்! நீ ஆண்மையிற் சிறந்த மைந்தனைப் பெறுவாயாக!

மூன்றாம் ஒருவர் : குழந்தாய்! நின் கணவனிடத்து மிக்க நன்கு மதிப்பை அடைவையாக!

இங்ஙனம் வாழ்த்துக் கூறிக் கௌதமியைத் தவிரத் துறவோர் மனைவிமார் எல்லாரும் போய்விடுகின்றனர்)

தோழிமார் : (அருகேவந்து) தோழி! நீ நல்ல மங்கள முழுக்கு முழுகினாய், என்று நினைக்கின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/100&oldid=1577159" இலிருந்து மீள்விக்கப்பட்டது