70
மறைமலையம் 6
சகுந்தலை : என் தோழிமார்க்கு நல்வரவாருக ! இங்கே இருங்கள்.
இருவரும் : (மங்களப்பண்டம் வைத்த கலத்தை எடுத்துக்கொண்டு வந்து இருந்து) அன்புள்ள சகுந்தலை! செவ்வையாயிரு, இம் மங்களமான மணக்கூட்டை நாங்கள் பூசுகின்றோம்.
சகுந்தலை : இஃது என்னாற் பெரிதும் பாராட்டற் பாலதாகும். என் றோழிமார் கைகளாற் செய்யப்படும்
இவ் வொப்பனை இனி எனக்குக் கிட்டுதல் அரிது. (கண்ணீர் உதிர்க்கின்றாள்.)
இருவரும் : தோழி! மங்களமான இந் நேரத்தில் நீ அழுவது தக்கதன்று (கண்ணீரைத் துடைத்து அவளுக்கு ஒப்பனை செய்கின்றனர்.)
ப
பிரியம்வதை : மணிக் கலன்களால் அணியத் தகுந்த உன் அழகிய வடிவத்திற்கு ஆசிரமத்தில் உள்ளவைகளால் ஒப்பனைசெய்வது அவ் வழகைக் குறைக்கின்றது.
(கையில் வரிசையொடு முனிவர் புதல்வ ரிருவர் வருகின்றனர்.)
முனிவர் புதல்வர் : இதோ அணிகலன்களிருக்கின்றன; இவற்றைப் பெருமாட்டியார் அணிந்துகொள்ளட்டும்.
L
(அவற்றைப் பார்த்ததும் எல்லோரும்
வியப்படைகின்றனர்.)
கௌதமி : குழந்தாய் நாரதா! இவை எங்கிருந்து கிடைத்தன?
ஒருவர் : தந்தை காசியபருடைய வல்லமையால்தான்.
கௌதமி: இவற்றைத் தம் மனத்தாற் படைத்தனரோ?
மற்றவர் : இல்லை, இல்லை, கேளுங்கள்; மாட்சிமை பொருந்திய முனிவர் எங்களை நோக்கிச் "சகுந்தலைக்காக மரங்களிளின்று மலர் பறித்து வாருங்கள்,” என்று கட்டளை