பக்கம்:மறைமலையம் 6.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மறைமலையம் -6

வாழ்க்கை யுடையார் தம் புதல்விமாரை முதன் முதற் பிரியுமிடத்து எத்துணை மிகுதியான துன்பத்தை எய்துவாராகல் வேண்டும்! (சுற்றி வருகின்றார்.)

தோழிமார் : அன்புள்ள சகுந்தலே! உனக்கு ஒப்பனை பண்ணியாயிற்று; இப்போது இப் பட்டாடைகள் இரண்டனையும் உடுத்துக்கொள்.

(சகுந்தலை எழுந்து அவ்வாடைகளை உடுக்கின்றாள்.)

கௌதமி : குழந்தாய்! நின்றந்தை பேரின்பம் பெருகுங் கண்களால் நின்னைத் தழுவினாற்போற் பார்த்துக் கொண்டு இதோ வருகின்றார்! அவரைப் பணிவாயாக!

சகுந்தலை : (நாணத்தோடு) அப்பா! வணங்குகின்றேன்.

காசியபர் : குழந்தாய்! யயாதி வேந்தனாற் சர்மிஷ்டை எங்ஙனம் நன்குமதிக்கப்பட்டனளோ அங்ஙனமே நீயும் நின் கணவனால் மிகவும் நன்கு மதிக்கப்படுவாயாக! அவள்

பூருவினைப் பெற்றெடுத்தவாறு போல நீயும் இவ் வுலகெல்லாஞ் செங்கோலோச்சும் பெறக்கடவாய்!

மைந்தனைப்

கௌதமி : அடிகேள்! இது வரமே யல்லது வாழ்த்துரை

அன்றே.

காசியபர் : குழந்தாய்! இப்போதுதான் வேட்கப் பட்ட இவ் வேள்வித் தீயை வலம் வருக.

(எல்லாருஞ் சுற்றி வருகின்றனர்.)

காசியபர்: (இருக்கு வேதசந்தசில் ஒரு செய்யுளைக் கூறி அவளை வாழ்த்துகின்றார்.) தூய விறகுகள் இடப்பட்டுந், தருப்பைப்புல் பரப்பி வேள்வி மேடையைச் சுற்றிலும் அமைத்த குழிகளில் வளர்க்கப்பட்டும் வேள்விப் பண்டங்களின் மணத்தாற் றீவினையைப் போக்கும் இவ்வேள்வித் தீக்கள் நின்னைத் தூய்மை செய்வனவாக! இப்போது புறப்படுக. (சுற்றிப் பார்த்து) சார்ங்கரவனும் மற்றையோரும் எங்கே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/103&oldid=1577162" இலிருந்து மீள்விக்கப்பட்டது