81
ஐந்தாம் வகுப்பு
களம் : அரண்மனை
(விதூஷகனும், இருக்கையில் இருந்த வண்ணமாய் அரசனுந் தோன்றுகின்றனர்.)
விதூஷகன் : (உற்றுக்கேட்டு) ஓ நண்பரே! இசைக் கழகத்துள் நடப்பதை உற்றுக் கேளும். தெளிவாகத் தெரியா விட்டாலும் மிக இனிமையாயும் பொருத்தமாயும் உள்ள ஒலிகளொடு கூடிய இசை எனக்குக் கேட்கின்றது. நங்கை அமிசபதிகை பண்கள் பாடப் பழகுவதாக அறிகின்றேன்.
ய
அரசன் : பேசாதிரு நான் சிறிது கேட்கின்றேன்.
(இடைவெளியிற் பாட்டுக் கேட்கின்றது.)
விழுநறவு வேண்டிவிரி மாவிணரிற் பருகிச்
செழுமுளரி யிடைவறிது சேருமிள வண்டே!
செழுமுளரி யிடையிருந்து திகழ்மாவை நீயோர்
பொழுதுமறந் துறைகுவது பொருந்துமோ உரையாய்?
அரசன் : இன்னிசையோடு கலந்து ஒழுகும் இப்பாட்டு ஆ எவ்வளவு சுவையா யிருக்கின்றது!
விதூஷகன் : இப் பாட்டின் சொற்பொருளை நீர் அறிந்து கொண்டீரா?
அரசன் : (புன்முறுவல் செய்து) இவள் ஒருகால் என்னால் நேசிக்கப்பட்டாள்; ஆகையால், அரசி வசுமதியைக் குறிப்பிட்டு எனக்கு இப் பழிப்புரை இவளிடமிருந்து வந்ததென்று அறிகின்றேன். நண்ப மாதவிய! அமிச பதிகை