86
மறைமலையம் -6
பார்த்தல்போலவும், தூயோன் ஒருவன் தூயனல்லாத ஒரு ருவனைக் காண்டல்போலவும், விழித்தெழுந்த ஒருவன் உறங்குவோன் ஒருவனை நோக்குதல் போலவும், வேண்டிய வாறு இயங்குவோன் ஒருவன் சிறைப்படுத்தப் பட்டிருக்கும் ஒருவனைக் கண்ணுறல் போலவுஞ் சிற்றின்பத்தில் அழுந்திக் கிடக்கும் இவர்களைக் கண்டு நானும் உவர்ப்படைகின்றேன்.
சகுந்தலை : (ஒரு கெட்ட குறியைக் கண்டு) ஐயோ! என் வலக்கண் என் துடிக்கின்றது?
கௌதமி : குழந்தாய்! தீமை விலகக்கடவது! நின் கணவன் குடிக்குரிய தெய்வங்கள் நினக்கு நன்மை தருவனவாக! (நடக்கின்றாள்.)
புரோகிதர் : (அரசனைச் சுட்டிக்காட்டி) ஓ துறவிகாள்! தன் அறங்கூறிருக்கையினை விட்டெழுந்தும், எக்குலத் தாரையும் எந்நிலையாரையுங் காப்பாற்றிவரும் மாட்சிமை தங்கிய வேந்தன் தங்கள் வருகையினை எதிர்நோக்கிக் கொண்டு அதோ இருக்கின்றார்! பார்மின்!
சார்ங்கரவன் : ஓ அந்தணர் தலைவ! அஃதுண்மை யாகவே புகழற்பாலது. ஆயினும், நாங்கள் அதனை ஒரு பெரிதாக எண்ணவில்லை. பழங்கள் பெருக்கப்பெருக்க மரங்கள் தலைகுனிகின்றன; புதுப்புனல் நிறைவினால் முகிற்கூட்டங்கள் கீழே மிகத்தாழ்ந்து மிதக்கின்றன; நல்லோர் செல்வப்பெருக்காற் செருக்கடைவதில்லை; பிறர்க்குதவி புரிவோர் இங்ஙனம் இருப்பது இயற்கையேயாம்.
வாயில்காவலன் : பெருமானே! அவர்கள் முகத்தில் அமைதியான ஒரொளி காணப்படுகின்றது; ஆகையால் அவர்கள் தாம் மேற்கொண்டதொரு தொழிற்றுறையில் உறுதியுடையவர் களாயிருக்கின்றார்களென நம்புகின்றேன்.
அரசன்
(சகுந்தலையைப் பார்த்து) பார்த்து) வதங்கின இலைகளின் நடுவே ஓர் இளந்தளிர் தோன்றுதல் போல நன்கு கட்புலனாகாத அழகிய உடம்பினளாய் இம் முனிவர்களின் நடுவில் முக்காடிட்டு வரும் இப் பெண் யாராயிருக்கலாம்?