பக்கம்:மறைமலையம் 6.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மறைமலையம் 6

படிதரா துழிதரும் பைஞ்சிறை வண்டெனத்

தொடுதலும் விடுதலுந் துணிய கில்லேனே.

(எண்ணிக் கொண்டிருக்கின்றான்.)

வாயில்காவலன் : இம் மன்னன் அறநெறியில் வைத்திருக் குங் குறி எவ்வளவு உயர்ந்ததாயிருக்கின்றது! அழகிற் சிறந்த இவ்வுரு எளிதிலே கிட்ட வருவதைக் கண்டும் வேறு யார் இங்ஙனந் தாழ்ப்பார்கள்?

சார்ங்கரவன் : ஓ அரசனே! நீர் ஏன் இங்ஙனம் வாளா

இருக்கின்றீர்!

அரசன் : ஓ துறவிகாள்! நான் எவ்வளவு தான் நினைத்துப் பார்த்தாலும் இந்த அம்மையை நான் மணம் புரிந்ததாக நினைவு வரவில்லையே அவ்வாறிருக்கக், கருக்கொண்ட குறிகள் நன்றாய்த் தோன்றும் இம் மாதர்க்கு, நானே கணவன் என்று ஐயுற்று இவரை நான் எவ்வாறு ஏற்றுக் கொள்ளலாம்?

சகுந்தலை : (அப்புறமாய்) மணம்புரிந்து கொண்டதைப் பற்றியே இப்போது ஐயம் நிகழ்ந்துவிட்டது; இனி என் ஆவல் எங்ஙனம் நிறைவேறப் போகின்றது!

சார்ங்கரவன் : அன்புகூர்ந்து அங்ஙனஞ் சொல்லாதீர். உம்மாற் புணரப்பட்ட தம் மகளை ஏற்றுக் கொண்டதற்காக அம் முனிவரை நீர் இழிவுபடுத்தியது பொருத்தமேதான்! திருடப்பட்ட பொருளைத் திருடினவனுக்கே திருப்பிக் காடுத்தலால் அம்முனிவர் உம்மைத் திருடனைப்போலவே செய்துவிட்டார்.

சாரத்துவதன் : சார்ங்கரவா! இனி நீ பேசுவதை நிறுத்து. சகுந்தலே! நாங்கள் சொல்ல வேண்டுவதைச் சொல்லினோம். அரசனோ இவ்வாறு சொல்லுகிறார். அவரை மெய்ப்பிக்கத் தகுந்ததான ஒரு விடைசொல்.

சகுந்தலை : (தனக்குள்) அத்தகைய காதற்கிழமையே இந்த மாறுதல் நிலைமைக்கு வந்துவிட்டபோது, போது, இனி நினைப்பூட்டுதலாற் பயன் என்ன? நான் துன்பத்திற்கு ஆளாக

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/121&oldid=1577180" இலிருந்து மீள்விக்கப்பட்டது