சாகுந்தல நாடகம்
91
வேண்டுமென்பது இங்கே தீர்க்கப்பட்டிருக்கின்றது. (புறத்தே) எம்பெருமானே! (இதுபாதிசொல்லி) மணம் புரிந்ததே ஐயமா யிருக்கையில், இங்ஙனம் அழைத்தல் கூடாது, ஓ பௌரவரே! துறவாசிரமத்தில் அவ்வாறெல்லாம் உடம்படுமொழிகள் சொல்லிக் கள்ளம் அறியாத என்னை ஏமாற்றிவிட்டு, இப்போது இச் சொற்களைச் சொல்லித் தள்ளிவிடுவது மக்குத் தகுதியாமா?
அரசன் : (காதின்மேற் கைகளை வைத்து) தீவினை விலகக்கடவது! கரை புரண்டு செல்கின்ற யாறானது தனது தெளிவான நீரைக் கலங்கச்செய்து கரைமேலுள்ள மரங்களையும் வேரோடும் விழப்பண்ணுதல்போல, என்னையும் இழிவாக்கி என் குலத்திற்கும் வடுவுண்டு பண்ண ஏன் முயல்கின்றனை?
சகுந்தலை : நல்லது, என்னைப் பிறனொருவன் மனைவியாக ஐயுற்று நீர் இப்படிச் செய்தால், தெரிதற்குரிய இவ்வடையாளத்தால் உமது ஐயப்பாட்டை ஒழிக்கின்றேன். அரசன் : இது நல்ல ஏற்பாடே.
சகுந்தலை : (மோதிரமிருந்த இடத்தைத் தடவி) ஆ!
ஐயோ! என் விரலில் மோதிரத்தைக் காணோமே!
களதமியை நடுக்கத்தோடு பார்க்கின்றாள்.)
கௌதமி : சக்கராவதாரத்திலுள்ள சசிதீர்த்தத்தை நீ குனிந்து வணங்குகையில் அம் மோதிரம் நழுவி விழுந்து விட்டது போலும்!
அரசன் : (புன்சிரிப்பொடு) (மகளிரது இயற்கையில் நேரத்திற்குத் தக்க சூழ்ச்சி தோன்றுமென்பது இதுதான்)
சகுந்தலை : இ இங்கு ஊழ் தன் வலிமையைப் புலப் படுத்திற்று. நான் இன் ன்னுமொரு நிகழ்ச்சியைச் சொல்லு கின்றேன்.
அரசன் : இப்போது கேட்க வேண்டியதொன்று வந்து விட்டது!