92
மறைமலையம் 6
சகுந்தலை : நீர் ஒருநாட் புதுமல்லிகைப் பந்தரின்கீழ் உமது லையாற் செய்த கலத்திலே தண்ணீர்
கையில் தாமரை
முகந்து வைத்துக் கொண்டிருக்கவில்லையா?
அரசன் : நல்லது; உன்னிப்பாய்க் கேட்கின்றோம்.
சகுந்தலை : அந்நேரத்தில், என் எடுப்புப் பிள்ளையான தீர்க்காபாங்கன் என்னும் மான் கன்றானது வந்தது. நீர் ‘அது முதலிற் குடிக்கட்டு'மென்று சொல்லித் தண்ணீரைக் காட்டி அதனை அருகிழுக்க முயன்றீர். அஃது முயன்றீர். அஃது உம்மிடத்திற் பழகாததனால் உமது கையருகில் வரவில்லை. அப்போது ஒவ்வொருவருந் தம் இனத்தாரிடத்திலேயே நம்பிக்கை யுடையராயிருக்கின்றனர்; இவ்வகையில் இருவீருங் காட்டுத் தன்மை யுடையீர்' என்று சொல்லி நீர் நகையாடி னீரல்லிரோ?
அரசன் : பொய்ந் நிறைந்தனவான இவைபோன்ற தேன்மொழிகளால் தங்கருத்தை முடித்துக் கொள்ளும் பெண்களாற் காமிகளே மயக்குறுகின்றனர்.
கௌதமி
பெரியீர்! அங்ஙனஞ் சொல்லாதீர். துறவாசிரமத்தில் வளர்க்கப்பட்ட இப்பெண் கள்ளமே அறியாள்.
ட
அரசன் : துறவொழுக்கத்தினின்று ஆண்டு முதிர்ந்த அம்மா! கற்றுக் கொடாமலே பெண்பாலுக்கு உரிய இத்தகைய திறமை, தாழ்ந்த விலங்குகளிற் பெண் இனத்திலுங்காணப் படுவதாயிற் பகுத்தறிவுடைய மக்களிடத்தில் அஃதெவ்வளவு இன்னும் மிகுதியாய்க் காணப்படுதல் வேண்டும்! தங் குஞ்சுகள் வானின்கட் பறக்கும்வரையிற் குயிற்பெடைகள் அவை தம்மை வேறு பறவைகளைக் கொண்டு வளர்த்துவரல் உண்மை யன்றோ?
சகுந்தலை : (கோபத்தொடு) கீழ்மகனே! உன்மன நிலைக்கு இணங்கப் பிறரையும் கருதுகின்றாய். அறக்கடமை என்னுஞ் சட்டையைப் போர்த்துக்கொண்டு, மேலே புற்களால் மூடப்பெற்றுக் கீழே மறைந்திருக்குங் கிணற்றை யொத்த உன்னைப்போல் வேறு யார்தாம் நடப்பார்?